3rd AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டைப் பிரதமர் தொடங்கி வைத்தார்
- புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03-08-2024) தொடங்கி வைத்தார்.
- இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள், "நிலையான வேளாண்-உணவு முறைகளை நோக்கிய மாற்றம்" என்பதாகிம்.
- பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் குறைதல், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள், மோதல்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிலையான விவசாயத்திற்கான அவசர தேவையை சமாளிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் 75 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,000 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், கேரளாவில் 9,994 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான நிலப்பகுதியை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பாணை கடந்த ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
- வயநாடு நிலச்சரிவு நடந்த அடுத்த நாள் வெளியிடப்பட்டுள்ளதோடு அதன்மீது மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்கள் அடுத்த 60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்த அறிவிக்கையில் குஜராத்தின் 449 சதுர கிலோமீட்டர், மகாராஷ்டிராவில் 17,340 சதுர கிலோமீட்டர், கோவாவின் 1,461 சதுர கிலோ மீட்டர், கர்நாடகாவின் 20,668 சதுர கீலோமீட்டர், தமிழ்நாட்டின் 6,914 சதுர கிலோமீட்டர், கேரளாவின் 9,993.7 சதுர கிலோ மீட்டர் என மொத்தம் 56,800 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- 5-வது ஆசியான் – இந்தியா சரக்கு வர்த்தக உடன்பாட்டு கூட்டுக் குழுவின் சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தை ஆய்வு செய்வதற்கான கூட்டம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஆசியான் செயலகத்தில் 2024 ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெற்றன.
- இது ஆசியான் - இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
- இந்தக் கூட்டத்திற்கு இந்திய வர்த்தகத் துறையின் கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மலேசிய முதலீடு, வர்த்தகம் - தொழில்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் (வர்த்தகம்) மஸ்துரா அகமது முஸ்தபா ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் 10 ஆசியான் நாடுகள், இந்தியாவை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- இந்தக் கூட்டுக் குழு மே 2023-ல் விவாதங்களைத் தொடங்கியது. பேச்சுவார்த்தை கட்டமைப்பை இறுதி செய்த பிறகு, அதன் துணைக் குழுக்கள் பிப்ரவரி 2024-ல் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.
- முதல் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 2024-ல் புதுதில்லியிலும், மே 2024-ல் மலேசியாவின் புத்ராஜெயாவிலும் நடைபெற்றன. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 3 வது சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டன.
- மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் 5வது கூட்டுக் கூட்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து பொதுவான புரிதலை வளர்ப்பதற்காக இந்தியத் தலைவர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
- இதன் மூலம் இந்தியா - ஆசியான் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க ஆசியான் பொதுச்செயலாளர் டாக்டர் காவோ கிம் ஹவுரன், ஆசியான் துணை பொதுச்செயலாளர் திரு. சத்விந்தர் சிங் ஆகியோருடன் தனித்தனியாக சந்திப்புகள் நடத்தப்பட்டன.
- இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 11% பங்கைக் கொண்ட ஆசியான் இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
- 2009-ல் கையெழுத்திடப்பட்ட ஏஐடிஜிஏ மறுஆய்வு நடைமுறை, இந்தியா-ஆசியான் வர்த்தகத்தின் அளவை மேம்படுத்த இருதரப்பிலும் உள்ள வர்த்தகங்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க உதவும். இதன் அடுத்த கூட்டம் இந்தியாவில் 2024 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெறும்.