31st AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஃபார்முலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
- சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- எஃப்ஐஏ முதற்கட்ட அனுமதி கொடுத்த நிலையில் கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் தொடங்கின. பயிற்சி போட்டிகள் இரவு 10.45 மணி வரை நடைபெறுகிறது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது.
- 3.7 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை பாா்முலா 4 காா் பந்தய சா்க்யூட், தீவுத்திடலில் தொடங்கி, போா் நினைவுச் சின்னம், நேப்பியா் பாலம் , சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை ஆகியவற்றின் வழியே மீண்டும் தீவுத்திடலை அடைவதுடன் நிறைவடைகிறது.
- ஐ.ஆா். எல். என்று அழைக்கப்படும் இந்திய ரேசிங் லீக் பந்தயத்தில் 6 அணிகள் உள்ளன. இதுவும் 5 சுற்றுகளை கொண்டது. போட்டி நடைபெறவுள்ள சாலைப் பகுதிகள் அனைத்திலும் உயரமான மின்னொளிகள், பாா்வையாளா்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளன.
- தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, கோவை - பெங்களூரு என மொத்தம் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- இந்நிலையில், தற்போது மேலும் கூடுதலாக, சென்னை எழும்பூர்-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு கண்டோன்மன்ட் மார்க்கத்தில் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் - 31ம் தேதி) காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.இந்த ரயில்கள் செப்டம்பர் 2ம் தேதி முதல் வழக்கமான சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் மூலம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி, புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க பயிற்சி அளிக்கப்படும்.
- தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 செல்போன்கள் உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
- மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட வுள்ள வத்வான் துறைமுக திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த துறைமுக திட்டம் ரூ.76,000 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
- நம் நாட்டின் நீதித்துறையின் உச்சபட்ச அதிகாரம் பெற்றதாக உச்சநீதிமன்றம் உள்ளது. இந்த உச்சநீதிமன்றம் கடந்த 1950ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முதலில் இந்த உச்சநீதிமன்றம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தான் செயல்பட்டு வந்தது.
- பழைய நாடாளுமன்ற கட்டத்தில் 8 ஆண்டுகள் வரை உச்சநீதிமன்றம் செயல்பட்டது. அதன்பிறகு தான் தற்போதைய இடத்துக்கு உச்சநீதிமன்றம் மாறுதல் செய்யப்பட்டது.
- இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் 75 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது.
- இதையடுத்து அனைத்து மாநிங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகள் பங்கேற்கும் வகையில் 2 நாள் தேசிய மாநாடு என்பது டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது.
- இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாடு, உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், அனைவருக்கும் உள்ளடக்கிய நீதிமன்ற அறைகள், நீதித்துறை பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நல்வாழ்வு, வழக்கு மேலாண்மை மற்றும் நீதித்துறை பயிற்சி போன்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்கான ஐந்து பணி அமர்வுகளை நடத்துகிறது.
- இந்த விழாவில் உச்சநீதிமன்றம் உருவாகி 75 ஆண்டு நிறைவு பெற்றதை குறிக்கும் வகையிலான ரூ.75 மதிப்பிலான நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
- இந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மேக்வால் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், பிற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
- தேசிய புனல் மின் கழகமான என்.எச்.பி.சி நிறுவனத்திற்கு மத்திய அரசு 'நவரத்னா' நிறுவனம் என்ற மதிப்புமிக்க அந்தஸ்தை வழங்கியுள்ளது.
- 30.08.2024 அன்று பொது நிறுவனத் துறை (நிதி அமைச்சகம்) வெளியிட்ட உத்தரவின்படி, என்.எச்.பி.சி 'நவரத்னா நிறுவனம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதற்கு அதிக செயல்பாட்டு மற்றும் நிதி சுயாட்சி வழங்கப்படுகிறது.
- பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரவில் இந்தியாவின் அவனி லேகரா தங்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்றனர்.
- மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். தற்போது மணிஷ் நார்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- ஆக 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 4 பதக்கங்கள் இந்தியாவுக்கு சொந்தமாகியுள்ளன. இப்போது, பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா 9-ஆவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.