2nd AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்
- புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2, 2024) தொடங்கி வைத்தார்.
- மத்திய-மாநில உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பரந்த அளவிலான பிரச்சினைகளை இந்த மாநாடு விவாதிக்கும்.
- மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் நமது தேசிய இலக்குகளை அடைவதற்கு தீர்க்கமான விடயங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
- ஆளுநர்களின் துணைக் குழுக்கள் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் குறித்தும் விவாதிக்கும் அமர்வுகளை நடத்தும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஆளுநர்கள் தவிர, மத்திய அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகளும் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வார்கள்.
- துணைக் குழுக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் நாளை (ஆகஸ்ட் 3, 2024) நிறைவு அமர்வின் போது குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.
- ஒடிசாவில் 600 மெகாவாட் இந்திராவதி, கர்நாடகாவில் 2000 மெகாவாட் திறன் கொண்ட ஷராவதி ஆகிய இரண்டு நீரேற்று நிலையங்களுக்கு மத்திய மின்சார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
- விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்கான அளவீடு மற்றும் ஆய்வின் கீழ் நீர்மின் உற்பத்தி நிலையங்களின் (சுமார் 60 GW) முன்மொழிவுகளையும் மின்சார ஆணையம் பெற்றுள்ளது.
- அனைத்து மேம்பாட்டாளர்களும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் பல்வேறு நிலைகளில் உள்ளனர். விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்ட பிறகு, மின்சார சட்டம், 2003 பிரிவு 8 இன் கீழ் மத்திய மின்சார ஆணையத்தின் இசைவுக்காக மேம்பாட்டாளர்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
- மத்திய அரசின் எளிதாக வர்த்தகம் செய்யும் கொள்கைக்கு ஏற்ப நீரேற்று அமைப்புகளின் ஒப்புதலை விரைவுபடுத்தும் வகையில், மத்திய மின்சார ஆணையம் பி.எஸ்.பி.க்களுககான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தவும் அதன் ஒப்புதலை எளிதாக்கவும் வழிகாட்டுதல்களை மேலும் திருத்தியுள்ளது.
- தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முக்கிய நாடாக உள்ளது.அந்த நாட்டின் பிரதமர் பாம் மின்ஹ் சின், மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது, ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், மூன்று ஒப்பந்தங்களுக்கான விரிவான ஆய்வும் செய்யப்பட்டது.
- இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:கிழக்கு நாடுகளுடன் நெருக்கம் என்ற நம் கொள்கையிலும், வலுவான மற்றும் சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியம் என்ற தொலைநோக்கு பார்வையிலும், வியட்நாம் மிக முக்கிய நாடாக உள்ளது.
- இரு நாடுகளுக்கும் இடையே வலுவான தொடர்புகள் உள்ளன.நாம், 2047ல் வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்குடன் பயணிக்கிறோம். அதுபோல வியட்நாமும், தொலைநோக்கு பார்வை - 2045 என்ற இலக்குடன் பயணிக்கிறது.
- இருவரும் இணைந்து தங்களுடைய நாட்டின் வளர்ச்சியுடன், பரஸ்பர வளர்ச்சிக்கும் உதவுவோம்.இந்தியா எப்போதும் வளர்ச்சியை ஆதரிக்கிறது. மற்ற நாடுகளை ஆக்கிரமித்து, தன் எல்லையை விரிவுபடுத்துவதை எதிர்க்கிறது.
- இந்த வகையில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், அனைத்து நாடுகளும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் இருப்பதை உறுதி செய்ய, வியட்நாமுடன் இணைந்து செயல்படுவோம்.
- வியட்நாமில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள, 2,500 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவின் நிதியுதவியுடன், வியட்நாமில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ மென்பொருள் பூங்காவை, இரு பிரதமர்களும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தனர்.