Type Here to Get Search Results !

23rd AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


23rd AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு அரசு - டாபர் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • வீட்டு பராமரிப்பு, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வரும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில், உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவது குறிப்பிடத்தக்கது.
  • இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு அரசிற்கும் டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது. 
திரிபுராவுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக ரூ.40 கோடியை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு ஒப்புதல்
  • திரிபுராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசின் பங்காக 40 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள், ராணுவத்தின் 3 குழுக்கள், விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மாநில அரசுக்கு உதவி வருகின்றன. 
உக்ரைன் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியை, கீவ் நகரில் இன்று (23.08.2024) சந்தித்தார். மரின்ஸ்கி அரண்மனைக்கு வந்த பிரதமரை அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்றார்.
  • இரு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்தும் விவாதித்தனர், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.  
  • இரு தலைவர்களின் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான இந்திய மனிதாபிமான மானிய உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024-2028 க்கான கலாச்சார ஒத்துழைப்பு திட்டம் கையெழுத்தானது.
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அரசுக்கு, ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கான பாரதத்தின் சுகாதார முன்முயற்சிக்கான (BHISHM) நான்கு  க்யூப்களை இன்று (23.08.2024) வழங்கினார். 
  • மனிதாபிமான உதவிக்காக பிரதமருக்கு உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இந்த க்யூப்கள், காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சையளிக்கவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் உதவும்.
  • ஒவ்வொரு BHISHM க்யூபும், அனைத்து வகையான காயங்கள் மற்றும் மருத்துவ சூழ்நிலைகளுக்கான முதல் வரிசை பராமரிப்புக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டுள்ளது. 
  • ஒரு நாளைக்கு 10-15 அடிப்படை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களும் இதில் அடங்கும். அவசர சிகிச்சை, ரத்தப்போக்கு, தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் பல்வேறு வகையான சுமார் 200 நிகழ்வுகளைக் கையாளும் திறன் க்யூப்கள் உள்ளன. 
  • இது தனது சொந்த சக்தியையும், ஆக்ஸிஜனையும் குறைந்த அளவில் உருவாக்க முடியும். க்யூபை இயக்க உக்ரைன் தரப்புக்கு ஆரம்ப பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்து நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
லாசேன் 'டையமண்ட் லீக்' தடகளத்தில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா
  • சுவிட்சர்லாந்தின் லாசேனில் 'டையமண்ட் லீக்' தடகளப் போட்டி நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 
  • பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், இப்போட்டியில் விளையாடவில்லை. முதல் வாய்ப்பில் 82.10 மீ., எறிந்த நீரஜ் சோப்ரா, இரண்டாவது வாய்ப்பில் 83.21 மீ., எறிந்தார். 
  • அடுத்த இரு வாய்ப்புகளில் 83.13, 82.34 மீ., மட்டும் எறிந்தார். ஐந்தாவது வாய்ப்பில் எழுச்சி கண்ட இவர், 85.58 மீ., எறிந்து 3வது இடத்துக்கு முன்னேறினார். 
  • தொடர்ந்து அசத்திய இவர், கடைசி வாய்ப்பில் அதிகபட்சமாக 89.49 மீ., எறிந்து 2வது இடத்தை உறுதி செய்தார். லாசேனில் 'ஹாட்ரிக்' தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா, வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
  • டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, லாசேன் 'டையமண்ட் லீக்' போட்டியில் தனது 3வது பதக்கத்தை பெற்றார். இதற்கு முன் 2022, 2023ல் தங்கம் வென்றிருந்தார்.
  • பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (90.61 மீ.,) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (87.08 மீ.,) வெண்கலம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel