Type Here to Get Search Results !

20th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


20th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

திண்டுக்கல்லில் பெருங்கற்கால நினைவுச் சின்னம்
  • திண்டுக்கல் மலைக்கோட்டைக்குத் தென் பகுதியில் ஒழுங்கற்ற முறையில் பெருங்கற்காலத்தைச் சோ்ந்த ஒரு கல் அமைப்பு உள்ளது. 
  • இந்தக் கல்அமைப்பை ஆய்வு செய்ததில், பழங்காலத்தில் இறந்தோா் நினைவாக எழுப்பப்பட்ட சின்னம் இருப்பது தெரியவந்தது. இதில் கல்லாங்குழிகளும் இடம் பெற்றுள்ளன.
  • கல்லாங்குழிகள் என்பது பணியாரக்குழி போன்ற ஓா் அமைப்பு. இந்தக் குழிகள் மனித இனத்தின் தொல்பழங்காலத்தில் இருந்தே உருவாக்கப்பட்டு வந்தன. சுமாா் 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனத்தால் இந்தக் குழிகள் உருவாக்கப்பட்டன என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
  • திண்டுக்கல்லில் கண்டெடுக்கப்பட்ட பெருங்கற்காலத்தைச் சோ்ந்த நினைவுச் சின்னத்தில் மொத்தம் 44 குழிகள் கண்டறியப்பட்டன. இந்தக் கல்லாங்குழிகள் 0.5 செ.மீ முதல் 4 செ.மீ ஆழம், 3 செ.மீ முதல் 8 செ.மீ விட்டத்தில் அமைந்துள்ளன. 
  • குழிகள் மூன்று தொகுதிகளாக உள்ளன. முதல் தொகுதியில் 28 குழிகளும், 2-ஆம் தொகுதியில் 7 குழிகளும், 3-ஆம் தொகுதியில் 9 குழிகளும் உள்ளன. 
  • இந்தப் பகுதியில் சுமாா் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மூதாதையா் நினைவாக அவா்களின் வழித்தோன்றல்களால் இவை அமைக்கப்பட்டிருக்கலாம்.
  • ஒரு சில குழிகளை மற்ற குழிகளுடன் இணைக்கும் வாய்க்கால் போன்ற ஆழமான கோடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மறைந்த மனிதா்கள் இடையே உள்ள ஏதோ ஓா் உறவு முறையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 
  • ஒரு குழியில் நீா் ஊற்றினால், இந்த வாய்க்கால் மூலம் இணைக்கப்பட்ட மற்ற குழிகளுக்கு சென்றடைகிறது. இதுபோன்ற வாய்க்கால் கோடுகளால் இணைக்கப்பட்ட கல்லாங்குழிகளை பொலிவியா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் நாம் காணலாம்.
  • இந்தச் சின்னத்தின் மேற்குப் பகுதியில் 3, 4 செ.மீ உயரமுள்ள செங்குத்தான கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 7 தொகுதிகளில் 131 கோடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. 
  • இந்தக் கோடுகள் எல்லாம் பெருங்கற்காலச் சின்னத்தையும் கல்லாங்குழிகளையும் உருவாக்க செலவழிக்கப்பட்ட மனித நாள்களாகக் கருதலாம். 
  • இந்தக் கோடுகள் உலோக ஆணிகள் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் பெருங்கற்காலமும் உலோக காலமும் சமகாலத்தவை என்பதை இந்தச் சின்னமும் இதில் உள்ள கல்லாங்குழிகளும் உறுதிப்படுத்துகின்றன.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தேசிய அளவிலான குழுவை நியமனம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
  • மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
  • இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. 
  • அப்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்த நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவில் ஒரு குழுவை அமைப்பதாகவும், அவர்கள் நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பரிந்துரைப்பார்கள் என்று தெரிவித்தனர். 
  • மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து உருவாக்க குழுவை நியமித்த நீதிபதிகள், அக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களின் பட்டியலையும் வெளியிட்டனர். 
  • அதன்படி, இந்திய அரசின் அமைச்சரவை செயலாளர், இந்திய அரசின் உள்துறை செயலாளர், மத்திய சுகாதார அமைச்சக செயலாளர், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் ஆகியோர் இக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் ஆவர்.
  • அத்துடன் இவர்கள் தவிர, அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர்.சரின், டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், டாக்டர் டி .நாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சௌமித்ரா ராவத், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இதய சிகிச்சை பிரிவு தலைவர் பேராசிரியை அனிதா சக்சேனா, மும்பை கிராண்ட் மருத்துவ கல்லூரி தலைவர் பேராசிரியர் பல்லவி சப்ரே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் இக்குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel