தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை 2024 / TAMILNADU WATER FUNNEL POWER PROJECTS POLICY 2024
TNPSCSHOUTERSAugust 13, 2024
0
தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை 2024 / TAMILNADU WATER FUNNEL POWER PROJECTS POLICY 2024: நீரேற்று புனல் மின் திட்டம் என்பது மின்சாரத்தை சேமிக்கும் மின் நிலையங்களாகும். பகலில், சூரிய மின் உற்பத்தி நேரங்களில் நீரை உயரத்தில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு ஏற்றம் செய்து மின்சார ஆற்றலை சேமிக்கின்றன.
இரவு நேரங்களில், மின்சார தேவை அதிகமாக இருக்கும் போது, சேமித்து வைக்கப்பட்ட நீரானது டர்பைன்கள் வழியாக விடப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கையின் வாயிலாக, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நீரேற்று புனல் மின் திட்டங்களை செயல்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் வரும் 2030-ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் சூரிய மின்உற்பத்தி நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாக உள்ள அதிகப்படியான பசுமை எரிசக்தியை சமப்படுத்தி மின் கட்டமைப்பில் மின்சாரமாக மாற்றி பயன்படுத்த நீரேற்று புனல் மின் திட்டங்கள் கொள்கை வழிவகுக்கும்.
ENGLISH
TAMILNADU WATER FUNNEL POWER PROJECTS POLICY 2024: A hydroelectric power plant is a power plant that stores electricity. During the day, during solar power generation hours, water is pumped into an elevated reservoir to store electrical energy. At night, when electricity demand is high, the stored water is pumped through turbines to generate electricity.
Through the Tamil Nadu Hydroponic Power Projects Policy, public sector and private companies are encouraged to implement hydroponic power projects. Also, a target has been set to set up 20,000 MW solar power plant in Tamil Nadu by 2030.
The principle of hydroelectric power projects leads to balancing the excess green energy produced in the above solar power plants and converting it into electricity in the power structure.