விஞ்ஞான் விருதுகள் 2024 / INDIAN SCIENCE AWARD 2024
TNPSCSHOUTERSAugust 08, 2024
0
விஞ்ஞான் விருதுகள் 2024 / INDIAN SCIENCE AWARD 2024: அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகஉயர்ந்த அறிவியல் விருதான முதல் விஞ்ஞான் ரத்னா புரஸ்கார் விருதுக்கு புகழ்பெற்ற உயிர் வேதியியலாளர் கோவிந்தராஜன் பத்மநாபன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இளம் விஞ்ஞானிகளுக்கான 18 விஞ்ஞான் யுவ புரஸ்கார் மற்றும் 13 விஞ்ஞான் ஸ்ரீபுரஸ்கார், சந்திரயான்-3 குழுவுக்கான விஞ்ஞான் குழு விருது உள்பட 33 ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கர் விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புத் துறையில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்புகளை அங்கீகரித்து, ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் மத்திய அரசால் நிறுவப்பட்டது.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதைக் குறிக்கும் வகையில், தேசிய விண்வெளி தினமான ஆகஸ்ட் 23 அன்று குடியரசுத் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான் 3 திட்டக்குழுவில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் விருது பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான்ஸ்ரீ விருது பெற்றவர்கள்
வான் இயற்பியல் விஞ்ஞானி அன்னபூரணி சுப்ரமணியன்,
வேளாண் விஞ்ஞானி ஆனந்தராமகிருஷ்ணன், அவேஷ் குமார் தியாகி (அணுசக்தி),
உமேஷ் வர்ஷ்னி, ஜெயந்த் பால்சந்திர உட்கோன்கர் ( உயிரியல் அறிவியல் துறை),
சையத் வாஜி அஹ்மத் நக்வி (பூமி அறிவியல்),
பீம் சிங் (பொறியியல் அறிவியல்),
ஆதிமூர்த்தி ஆதி, ராகுல் முகர்ஜி (கணிதம் மற்றும் கணினி அறிவியல்),
சஞ்சய் பிஹாரி (மருத்துவம்),
லட்சுமணன் முத்துசாமி, நாபா குமார் மொண்டல் (இயற்பியல்),
ரோஹித் ஸ்ரீவஸ்தவா (தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்).
அபிலாஷ், ராதா கிருஷ்ண காந்தி (பொறியியல் அறிவியல்),
புரபி சைகியா, பப்பி பால் (சுற்றுச்சூழல் அறிவியல்),
மகேஷ் ரமேஷ் கக்டே (கணிதம் மற்றும் கணினி அறிவியல்),
ஜிதேந்திர குமார் சாஹு, பிரக்யா துருவ் யாதவ் (மருத்துவம்),
உர்பசி சின்ஹா (இயற்பியல்),
திகேந்திரநாத் ஸ்வைன் ஸ்பேஸ், பிரசாந்த் குமார் (விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்),
பிரபு ராஜகோபால் (தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு)
கிருஷ்ண மூர்த்தி, ஸ்வரூப் குமார் பரிதா (வேளாண் அறிவியல்),
இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். பல்வேறு அறிவியல் துறைகளால் வழங்கப்பட்ட 300 விதமான விருதுகளுக்கு பதிலாக இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.
ENGLISH
INDIAN SCIENCE AWARD 2024: Renowned biochemist Govindarajan Padmanabhan has been selected for the first Vigyan Ratna Puraskar, the highest scientific award conferred by the government.
The Center on Wednesday announced 33 Rashtriya Vigyan Puraskar awards, including 18 Vigyan Yuva Puraskars and 13 Vigyan Sripuraskars for young scientists, and the Vigyan Group Award for the Chandrayaan-3 crew.
Earlier this year, the Rashtriya Vigyan Puraskar Awards were instituted by the Central Government to recognize contributions to scientific and technological innovation by researchers, technologists and inventors in the field of science, technology and innovation.
Republic Draupadi Murmu is expected to present the awards on August 23, the National Space Day, to mark Chandrayaan-3's landing on the Moon's South Pole.
It is noteworthy that Weeramuthuvel from Villupuram district of Tamil Nadu will receive the award in the Chandrayaan 3 project team.