19th AUGUST 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம்
- தலைமைச்செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்ட நிலையில் அவருக்கு பதில் நா.முருகானந்தம் புதிய தலைமைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- முதல்வரின் தனிச் செயலராக பணியாற்றிய முருகானந்தம் தற்போது தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழக அரசின் 50வது தலைமைச் செயலர் நா.முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவா் சென்னையைச் சோ்ந்தவா். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான இவா் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தோ்ச்சி பெற்று பணியில் சோ்ந்தாா்.
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
- இங்கு கண்ணாடி மணிகள், கல் மணிகள், சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப் பகுதி, நாயக்கா் கால செம்புக் காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்நிலையில், சுடுமண்ணாலான முத்திரை, விளக்கு, கல் பந்து, கல்லால் ஆன சில்லு வட்டு ஆகியவை நேற்று (ஆகஸ்ட் 18ம் தேதி) கண்டெடுக்கப்பட்டன.
- இதன் மூலம், முன்னோா்கள் விலங்குகளை விரட்டுவதற்காக கல் பந்தைப் பயன்படுத்தியதும், முத்திரை மூலம் வணிகம் செய்து வந்ததும் உறுதி செய்யபட்டுள்ளது.
- மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை, வைப்புத் தொகை திரட்டுதல், டிஜிட்டல் பணப் பட்டுவாடா, சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- இந்தக் கூட்டத்தில் செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி, நிதி சேவைகள் துறை செயலாளர் (நியமனம்) திரு எம் நாகராஜு, பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், நிதிச் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 2024 நிதியாண்டின் போது நிகர வாராக்கடன்கள் 0.76 சதவீதமாக குறைந்தது. மேலும் பங்குதாரர்களுக்கு ரூ.27,830 கோடி ஈவுத்தொகையுடன் பொதுத்துறை வங்கிகள் ரூ. 1.45 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன என்ற தகவல் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.