கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
- மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
- இந்த நாணயத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் மணியளவில் நடைபெற்றது.
- விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
- கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் என்பது சீருடை பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர், காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை) மற்றும் நிலைய அதிகாரி (தீயணைப்புத்துறை), காவல் சார்பு ஆய்வாளர் (தொழில் நுட்பம்), காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது.
- இந்தநிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக இருந்த டி.ஜி.பி. சீமா அகர்வால், கடந்த சில நாட்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
- இந்தநிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
- இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஆகஸ்ட் 18, 2024 அன்று புதுதில்லியில் உணவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலையை சமாளிக்க ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- சர்க்கரை, உப்பு போன்ற பொதுவான உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை உணவு மற்றும் வேளாண் அமைப்பின் சமீபத்திய அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
- இந்தத் திட்டத்தின் கண்டுபிடிப்புகள் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவிப்பது மட்டுமின்றி, மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த உலகளாவிய புரிதலுக்கும் பங்களிக்கும்.
- இந்த சுற்றுச்சூழல் சவாலை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்திய ஆராய்ச்சியை மாற்றும்.