அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- இன்று (17.08.2024) அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களைச் சோ்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீா் நிரப்பி அதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கும், விவசாயம், குடிநீா் உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தொடங்கப்பட்ட திட்டம் தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்.
- இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2016ம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடா் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஆய்வுப் பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ. 3.27 கோடியை ஒதுக்கீடு செய்து, அதனைத் தொடர்ந்து அரசாணையும் வெளியிட்டாா்.
- அதன் பின்னரும் திட்டம் வேகமெடுக்காத நிலையில், அவிநாசியில் 2017ம் ஆண்டு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடா்ந்து 2018ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு ரூ. 1,916.41 கோடி நிதியில் இந்தத் திட்டம் முழுமை அடைந்துள்ளது.
- நாடாளுமன்ற குழுக்கள் அமைப்பது குறித்த அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட்டது. அதன்படி, நாடாமன்ற பொதுக்கணக்கு குழுவுக்கு காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் தலைமை தாங்குகிறார்.
- பாஜகவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் தலைமையில் மதிப்பீட்டு குழுவும், அவரின் சகாவான பைஜயந்த் பாண்டா பொது நிறுவனங்களுக்கான குழுவுக்கும் தலைமை வகிக்கின்றனர்.
- பொதுக்கணக்கு குழு, பொதுநிறுவனங்களுக்கான குழு மற்றும் மதிப்பீட்டுக்குழு ஆகிய மூன்றும் நாடாளுமன்றத்தின் முக்கியமான நிதிக்குழுக்களாகும். இவை, அரசின் கணக்குகள் மற்றும் பொதுநிறுவனங்களின் பணிகளை கண்காணிக்கின்றன.
- இந்த மூன்று குழுக்களின் பதவி காலம் ஓராண்டு. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் குழுவின் உறுப்பினர்களாக இருப்பர். அவர்கள் இரண்டு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- இதேபோல், மத்திய அமைச்சரவை மற்றும் துறைகளைக் கண்காணிக்கும் பிற துறைகளைச் சேர்ந்த நிலைக்குழுக்களும் உள்ளன. அதேபோல், இதர பிற்படுத்தப்பட்டவர் நலன்களுக்கான குழு, பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலன்களுக்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
- இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான குழுவுக்கு பாஜகவைச் சேர்ந்த கணேஷ் சிங் தலைமை தாங்குகிறார். எஸ்சி மற்றும் எஸ்டி நலன்களுக்கான குழுவுக்கு பாஜகவின் ஃபக்கான் சிங் குலாஸ்தே தலைமை தாங்குகிறார்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, புனே மெட்ரோ முதல் கட்டத் திட்டத்தின் தற்போதுள்ள பிசிஎம்சி – ஸ்வர்கேட் மெட்ரோ ரயில் பாதையின் ஸ்வர்கேட் முதல் கத்ராஜ் சுரங்க ரயில் பாதை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- இந்த புதிய நீட்டிப்பு லைன்-எல் பி நீட்டிப்பு என்று அழைக்கப்படுகிறது. இது 5.46 கிலோ மீட்டர் பரப்பளவில் இருக்கும் மற்றும் மூன்று நிலத்தடி நிலையங்களை உள்ளடக்கியதாகும். இது மார்க்கெட் யார்டு, பிப்வேவாடி, பாலாஜி நகர், கட்ராஜ் புறநகர் போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கும்.
- புனேவில் தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், பிப்ரவரி - 2029-க்குள் முடிக்கப்பட உள்ளது.
- இத்திட்டத்திற்கான உத்தேச மதிப்பீடு ரூ.2954.53 கோடியாகும். இதற்கான நிதியுதவியை மத்திய அரசும், மகாராஷ்டிர மாநில அரசும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதுடன், இருதரப்பு முகமைகளின் பங்களிப்பும் இதில் அடங்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, மகாராஷ்டிராவில் தானே ஒருங்கிணைந்த வட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- 29 கி.மீ தூர திட்டம் தானே நகரின் மேற்குப் பகுதியின் சுற்றளவில் 22 நிலையங்களுடன் இயங்கும். இந்தக் கட்டமைப்பின் ஒருபுறம் உல்லாஸ் நதியும் மறுபுறம் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் உள்ளன.
- இந்த இணைப்பு, நகரம் தனது பொருளாதார திறனை உணரவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் நிலையான மற்றும் திறமையான போக்குவரத்து முறையை வழங்கும். இந்த திட்டம் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இத்திட்டத்திற்கான உத்தேச மதிப்பீடு ரூ.12,200.10 கோடியாகும். இதில் மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசின் சமமான பங்கு மற்றும் இருதரப்பு முகமைகளின் பகுதி நிதி ஆகியவை அடங்கும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, 31 நிலையங்களைக் கொண்ட 44.65 கிலோ மீட்டர் நீளமுள்ள இரண்டு உயர்த்தப்பட்ட வழித்தடங்களைக் கொண்ட பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
- மூன்றாம் கட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, பெங்களூரு நகரம் 220.20 கிலோமீட்டர் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும்.
- இத்திட்டத்தின் மொத்த செலவு 15,611 கோடி ரூபாயாகும். பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நகரின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. கட்டம்-3 நகரத்தில் மெட்ரோ ரயில் வலையமைப்பின் முக்கிய விரிவாக்கமாக செயல்படுகிறது.
- மூன்றாம் கட்டத்தில், முன்பு தண்ணீர் வசதி இல்லாத பெங்களூரு நகரின் மேற்குப் பகுதியை இணைக்கும் வகையில் சுமார் 44.65 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பித்தாவில் 1,413 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் புதிய சிவில் பகுதி வளாகம் அமைப்பதற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த உள்கட்டமைப்புத் திட்டம் பாட்னா விமான நிலையத்தின் எதிர்பார்க்கப்படும் திறனை நிவர்த்தி செய்வதற்கான ஒரு உத்திசார் நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது.
- பாட்னா விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் இந்திய விமானநிலைய ஆணையம் ஏற்கனவே ஈடுபட்டுள்ள நிலையில், குறைந்த அளவு நிலம் கிடைப்பதால் மேலும் விரிவாக்கம் தடைபடுகிறது.
- பித்தா விமான நிலையத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் 66,000 சதுர மீட்டர் பரப்பளவில் 3000 உச்ச நேர பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்கிறது.
- தேவைப்படும் போது மேலும் 50 லட்சம் பயணிகள் பயணிக்க இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இறுதித் திறன் ஆண்டொன்றுக்கு ஒரு கோடி பயணிகள் பயணிக்கும் வகையில் அமையும்.