தமிழ்நாட்டில் மேலும் இரண்டு நீர்நிலைகள் ராம்சார் தளங்களாக அறிவிப்பு
- தமிழ்நாட்டில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் கழுவேலி பறவைகள் சரணாலயம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தவா நீர்த்தேக்கம் ஆகிய மூன்று புதிய தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- நாட்டில் ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க கொள்கை உந்துதலுக்கு, இந்த புதிய தளங்கள் ஒரு சான்றாகும்.
- 1971-ல் ஈரானின் ராம்சாரில் கையெழுத்திடப்பட்ட ராம்சார் உடன்படிக்கையின் ஒப்பந்ததாரர்களில் இந்தியாவும் ஒன்றாகும். பிப்ரவரி 1,1982 அன்று இந்தியா இந்த மாநாட்டில் கையெழுத்திட்டது.
- 1982 முதல் 2013 வரை ராம்சார் தளங்களின் பட்டியலில் மொத்தம் 26 தளங்கள் சேர்க்கப்பட்டிருந்தன, ஆனால், 2014 முதல் 2024 வரை, நாடு 59 புதிய ஈரநிலங்களை ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.
- தற்போது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ராம்சார் தளங்கள் (18 தளங்கள்) உள்ளன, அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் (10 தளங்கள்) உள்ளன.
- ஜனாதிபதி பதக்கம் தேசிய அளவில் சிறப்பாக பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
- 23 தமிழக போலீசார் அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
- அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) அடிப்படையிலான 2024 ஜூலை மாதத்திற்கான ஆண்டு பணவீக்க விகிதம், 2.04% ஆகும்.
- உணவுப் பொருட்கள், தாது எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, பிற உற்பத்தி பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வு, 2024 ஜூலையில் நேர்மறையான பணவீக்க விகிதத்திற்கு முதன்மையான காரணமாகும்.
- ஜூலை, 2024 மாதத்திற்கான WPI குறியீட்டில், மாதத்திற்கு மாதம் ஏற்படும் மாற்றம் ஜூன், 2024 உடன் ஒப்பிடும்போது 0.84% ஆக இருந்தது.
- ஜூலை 2024-க்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 62.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஜூலை 2023 உடன் ஒப்பிடும்போது 2.81 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
- ஜூலை 2024-க்கான மொத்த இறக்குமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 72.03 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஜூலை 2023 உடன் ஒப்பிடும்போது 7.14 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
- ஏப்ரல்-ஜூலை 2024 காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 261.47 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 6.65 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
- ஏப்ரல்-ஜூலை 2024 காலகட்டத்தில் மொத்த இறக்குமதி 292.64 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 7.30 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
- ஜூலை 2023-ல் 34.49 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ஜூலை 2024-ல் வணிக ஏற்றுமதி 33.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- ஜூலை 2024-ல் பெட்ரோலியம் அல்லாத மற்றும் நவரத்தினங்கள் அல்லாத ஏற்றுமதி 2023 ஜூலையில் 25.47 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது 26.92 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- பெட்ரோலியம் அல்லாத, ரத்தினங்கள் அல்லாத ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த உலோகங்கள்) இறக்குமதி ஜூலை 2023-ல் 36.16 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது ஜூலை 2024-ல் 38.98 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனங்களை தகர்ப்பதற்கு, கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணை லாஞ்சரான Man Portable Anti-tank Guided Missile (MPATGM) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO) உருவாக்கியது.
- இதை மிக எளிதாக கையில் தூக்கிச் சென்று தோள்பட்டையில் வைத்து எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனம் மீது தாக்குதல் நடத்தும் விதமாக இந்த MPATGM ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு என எந்த நேரத்திலும் MPATGM ஏவுகணை லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்த முடியும் என கூறப்படுகிறது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த MPATGM ஏவுகணை லாஞ்சரில், இலக்கை துல்லியமாக கணக்கிடும் கருவி, ஃபயர் கன்ட்ரோல் யூனிட் என 3 முக்கிய பகுதிகள் உள்ளன.
- ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் கடந்த ஏப்ரல் 13 மற்றும் 14-ம் தேதியன்று இந்த MPATGM ஏவுகணை ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.
- இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் MPATGM ஏவுகணை நேற்று (ஆக. 13) மீண்டும் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கனிம வளங்களுக்கு மாநில அரசுகள் வரி விதிப்பது தொடர்பான வழக்குகளில் 1989-ம் ஆண்டு, 2004-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை அளித்திருந்தது. ஆனால் இந்த இரு தீர்ப்புகளும் முரண்பட்டதாக இருந்தன.
- 1989-ம் ஆண்டு இந்தியா சிமெண்ட்ஸ் vs தமிழ்நாடு வழக்கில் மத்திய அரசு தரும் ராயல்டியும் வரியின் கீழ் வரும் என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் 2004-ம் ஆண்டு மேற்கு வங்க அரசு vs கேசோராம் இண்டஸ்ட்ரீஸ் வழக்கில் ராயல்டி ஒரு வரி என 1989-ல் உச்சநீதிமன்றம் தவறாக குறிப்பிட்டுவிட்டது.
- ராயல்டி மீதான செஸ்வரி என திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனிடையே கனிம வளங்களுக்கு வரி, ராயல்டி வசூலிக்க உரிமை இல்லை என கோரி உச்சநீதிமன்றத்தில் கனிம வள சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
- 2011-ல் இதனை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு உரிமை உண்டு.
- கனிம வளங்களுக்காக மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் பெறுகிற ராயல்டி தொகையை வரியாக கருத முடியாது; கனிம வளம் உள்ள நிலத்தின் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுக்குதான் உண்டு.
- நிலம் என குறிப்பிட்டாலே கனிம வளம் உள்ள நிலத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என 9 நீதிபதிகளில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பளித்தனர். இதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
- ஆனால் மத்திய அரசு தரப்பு வாதத்தை நிராகரித்து, கனிம வளங்களுக்கு சுரங்க குத்தகைதாரர்கள் மற்றும் மத்திய அரசிடம் இருந்து 2005-ம் ஆண்டு ஏப்ரல் முதல் வரி மற்றும் ராயல்டி தொகையை மாநில அரசுகள் பெற்றுக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.