கடலூர் அகழாய்வில் வட்டச்சில்லுகள் கண்டெடுப்பு
- கடலூர் மாவட்டம் மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- பெண்களும் சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர். இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது.
- வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என்பது உறுதியாகின்றது.
- பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று காலை டெல்லியில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து இருதரப்புகளிலும் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
- இரண்டு தலைவர்களும் மாஸ்கோவில் இருக்கும் ஆல் ரஷ்யன் எக்சிபிஷன் மையத்தை இன்று பார்வையிட்டனர். இந்த மையம் நவம்பர் 2023- ல் திறக்கப்பட்டது.
- இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் வரலாற்றில் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அணுசக்தி துறையில் இந்தியா-ரஷ்யா ஒத்துழைப்பு தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- இத்துடன், இந்தியாவின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய பகுதியாக கருதப்படும் VVER-1000 அணு உலைக்கான நிரந்தர மாதிரியான "Atomic Symphony"யும் பிரதமருக்கு காண்பிக்கப்பட்டது.
- இதன் நீட்சியாக இரண்டு தலைவர்களும் கிரம்ப்ளின் மாளிகையில் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து ஆறு உயர் சக்தி அணுசக்தி அலகுகளை உருவாக்குவது மற்றும் இந்தியாவில் குறைந்த ஆற்றல் கொண்ட அணுமின் நிலையங்களை உருவாக்குவது என்று ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைன் போர் துவங்கிய பின்னர் முதன் முறையாக மோடி, புடின் சந்திப்பு நடந்துள்ளது.
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ள ஹரிடமடா கிராமத்தில் பிரம்ம குமாரிகளின் தெய்வீக தியான மையத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 8, 2024) திறந்து வைத்தார்.
- பிரம்ம குமாரிகளின் 'நிலைத்தன்மைக்கான வாழ்க்கை முறை' என்ற தேசிய இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
- இந்திய - ரஷ்ய உறவுகளை வளர்ப்பதில் சிறப்பான பங்களிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் மிக உயர்ந்த தேசிய விருதான "புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரின் ஆணை" விருதை, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின் வழங்கினார்.
- 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த விருது, கிரெம்ளினில் உள்ள புனித ஆண்ட்ரூ ஹாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
- விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த விருதை இந்திய மக்களுக்கும், இந்தியா, ரஷ்யா இடையேயான பாரம்பரிய நட்புறவுக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.
- இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு, முன்னுரிமை பாதுகாப்பு கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
- இந்த விருது 300 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
- பதினாறாவது நிதிக்குழு 6 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. டாக்டர் டி.கே. ஸ்ரீவத்சவா, திரு நீல்காந்த் மிஸ்ரா, டாக்டர் பூனம் குப்தா, திருமதி பிரஞ்சுல் பண்டாரி, ராகுல் பஜோரியா டாக்டர் பூனம் குப்தா ஆலோசனைக் குழுவின் அமைப்பாளராக இருப்பார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அதிகார வரம்பைத் தாண்டி பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவு தேசிய அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.
- பெரும்பாலும் 'உயர் கடல்கள்' என்று குறிப்பிடப்படும் பகுதிகள், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள உலகளாவிய பொதுவான பெருங்கடல்கள் ஆகும்.
- அவை கப்பல் போக்குவரத்து, வான்வழிப் பயணம், நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் மற்றும் குழாய்கள் அமைப்பது போன்ற சட்டப்பூர்வமான சர்வதேச நோக்கங்களுக்காக அனைவருக்கும் உரிமை உள்ளவையாக உள்ளன. இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் புவி அறிவியல் அமைச்சகம் தலைமை வகிக்கும்.
- டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. டி20 தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
- இந்த நிலையில், ஐசிசியின் ஜூன் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ரோஹித் சர்மா, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் விருதுக்கான போட்டியில் இருந்தபோதிலும், அவர்களை பின்னுக்குத் தள்ளி விருதினை தட்டிச் சென்றுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.
- டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்துவீசினார். அவர் 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் அவர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
- இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டத்தின் 12-வது பதிப்பு ஜூலை 09, அன்று அபுதாபியில் நடைபெற்றது.
- இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பரந்த அளவிலான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
- கூட்டு ராணுவப் பயிற்சி, பாதுகாப்பு மற்றும் தொழில் ஒத்துழைப்பு, பாடப்பொருள் வல்லுநர் பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற துறைகளில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
- கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததுடன், பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினர்.
- ஒருவருக்கொருவர் அனுபவம் மற்றும் அறிவிலிருந்து பயனடைய வெவ்வேறு களங்களில் பயணங்களை பரிமாறிக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முக்கிய துறைகளில் பயிற்சி வாய்ப்புகளை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.