
7th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
குஜராத்தின் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனையும், நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
- குஜராத் மாநிலம் அகமதாபாதில் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவனை மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (07-07-2024) திறந்து வைத்தார்.
- குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அகமதாபாதில் ஸ்லிம்ஸ் (எஸ்.எல்.ஐ.எம்.எஸ்) நவீன பன்னோக்கு மருத்துவமனையையும் திரு அமித் ஷா திறந்து வைத்தார்.
- முன்னதாக, அகமதாபாதில் உள்ள ஜெகன்நாதர் கோவிலில் திரு அமித் ஷா மங்கள ஆரத்தி செய்தார்.
- கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி 244 தொகுதிகளை இழந்து வெறும் 121 இடங்களை மட்டுமே பிடித்தது. எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்று 411 இடங்களைக் கைப்பற்றியது.
- அதையடுத்து, அந்தக் கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் நாட்டின் பிரதமராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
- பிரிட்டனுக்கு உரிய ஆவணங்களின்றி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான சா்ச்சைக்குரிய மசோதாவை ரத்துசெய்வதாக அந்த நாட்டின் புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் சனிக்கிழமை அறிவித்தாா்.