6th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி தரப்பட உள்ளது.
- ஆருயிர் - அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தலைமைச் செயலகத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து பணிக்கு தேர்வான 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகள் நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் 3ம் கட்ட அகழாய்வு பணி கடந்த 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
- முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, கிபி 16ம் நூற்றாண்டு நாயக்கர் கால செப்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
- இந்நிலையில் இன்று (ஜூலை 6) உடைந்த நிலையில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காளை உருவ பொம்மை, சுடுமண் காதணி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் மணி ஆகிய தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
- ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், இதையடுத்து அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
- இந்தத் தேர்தலில் மொத்தம் 3 கோடி பேர், அதாவது வாக்களிக்க தகுதியானவர்களில் 49.8% பேர் வாக்களித்துள்ளனர். அதில் மசூத் பெசெஷ்கியனுக்கு ஆதரவாக 1.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.
- அதேநேரம் சயீத் ஜலிலிக்கு ஆதரவாக 1.3 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதையடுத்து அங்கு நடந்த அதிபர் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதில் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றுள்ளார்.
- பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில், மொத்த சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு தொடர்பான ஊட்டச்சத்து தகவல்களை பெரிய எழுத்துக்களில் காட்சிப்படுத்தும் திட்டத்திற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ - FSSAI) ஒப்புதல் அளித்துள்ளது.
- ஊட்டச்சத்து தகவல் தொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள்-2020-ல் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கும் இந்த முடிவு உணவு ஆணையத்தின் 44-வது கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
- இக்கூட்டம் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைவர் திரு அபூர்வா சந்திரா தலைமையில் நடைபெற்றது. நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை நன்கு புரிந்துகொள்வதற்கும் அதற்கேற்ப முடிவுகளை எடுப்பதற்கும் அதிகாரம் அளிப்பதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த திருத்தத்திற்கான வரைவு அறிவிக்கை இப்போது பொது களத்தில் வைக்கப்படும். அதன் மீது ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் வரவேற்கப்படும்.
- ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ள நுகர்வோருக்கு அதிகாரம் அளிப்பதுடன், தொற்றா நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த திருத்தம் பங்களிக்கும்.