5th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2023-24 நிதியாண்டில் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சாதனை உயர் அளவாக ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியது
- தற்சார்பு இந்தியா இலக்கை எட்டுவதில் கவனம் செலுத்தும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உள்ள அரசின் கொள்கைகள், முன்முயற்சிகளில் வெற்றிகரமான அமலாக்கத்தை அடுத்து 2023-24 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகம் வருடாந்தர பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் முன் எப்போதும் இல்லாத உயர் அளவை எட்டியுள்ளது.
- பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்புத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் பிற பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி 2023-24 நிதியாண்டில் சாதனை உயர் அளவாக ரூ.1,26,887 கோடி மதிப்புக்கு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இது சென்ற நிதியாண்டைவிட (2023-24) 16.7 சதவீதம் அதிகமாகும்.
- பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கடந்த ஜூன் 4 தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டது.
- இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், இடதுசாரி தொழிலாளர் கட்சியும் போட்டியிட்டன.
- இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் தொழிலாளர் கட்சி 408 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 136 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
- ஆட்சியமைக்க 326 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் 408 இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியமைக்க உள்ளது. 14 ஆண்டுகள் கழித்து இடதுசாரி கட்சி பிரிட்டனில் ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இடதுசாரி தொழிலாளர் கட்சியின் சார்பில் கெயர் ஸ்டேமர் அடுத்த பிரதமராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.