
4th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக 3வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்பு
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம்- காங்கிரஸ் இணைந்த "இந்தியா" கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார்.
- ஹேமந்த் சோரன் மீது நில மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகளைத் தொடர்ந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.
- முன்னதாக தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் கல்பனாவுக்கு ஆதரவு இல்லை என்பதால் சீனியரான சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்.
- இந்த நிலையில் ஹேமந்த் சோரன் ஜாமீன் மனுவை விசாரித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம், அவர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமுமே இல்லை என கூறி ஜாமீனில் விடுதலை செய்தது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடும் செய்திருக்கிறது.
- இந்தப் பின்னணியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இதனையடுத்து ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்த சம்பாய் சோரன் தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் ஹேமந்த் சோரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
- இதனடிப்படையில் இன்று மாலை ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
- ஆளுநர் மாளிகையில் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனுக்கு சிபி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 3-வது முறை பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.
- நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளில் பல்வேறு அமைச்சரவைக் குழுக்களை ஒன்றிய அரசு அமைத்தது.
- பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜுவால் ஓரம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜல் சக்தி அமைச்சர் சி ஆர் பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் சட்டத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- பிளாஸ்டிக் மறுசுழற்சி, நீடித்த தன்மை குறித்த நான்கு நாள் உலகளாவிய மாநாடு இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத மண்டபத்தில் தொடங்கியது.
- இம்மாநாட்டை மத்திய ரசாயனம், உரங்கள் அமைச்சக செயலாளர் திருமதி நிவேதிதா சுக்லா வர்மா தொடங்கி வைத்தார். மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மெர்சி எபாவோ இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.