
30th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்திய முதல் மாநிலம்
- உத்தரகண்டில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பெண்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற மாநில மாநில கூட்டுறவு அமைச்சர் டாக்டர். தன் சிங் ராவத்தின் முன்மொழிவுக்கு, அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் அடிப்படையில், உத்தரகண்டில் கூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- இந்த அறிவிப்பு மாவட்ட கூட்டுறவு சங்கங்கள், பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாநில அளவிலான கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்.
- பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் சரப்ஜோத் சிங் இணை, தென்கொரியாவின் லீ வோங்கோ - ஓ யே ஜின் இணையை எதிர்கொண்டது.
- முதல் சுற்றை இழந்த போதும் மனம் தளராத இந்திய இணை, அடுத்தடுத்த சுற்றுகளில் இலக்கை நோக்கி துல்லியமாக சுட்டு புள்ளிகை குவித்தது.
- இறுதியில் 16-10 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தியது. இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.
- இதற்கு முன்பு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மனு பாக்கர், 124 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்றவர் என்ற சாதனையை சமன் செய்தார்.
- முன்னதாக 1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆங்கிலோ இந்தியனான நார்மன் பிரிட்சர்ட்ஸ் தடகளத்தில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது.
- மேலும், சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றவர் என்ற வரலாற்று சாதனையையும் மனு பாக்கர் தன் வசப்படுத்தியுள்ளார்.