28th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
12 மாநில ஆளுநர்கள் மாற்றம் - குடியரசு தலைவர் உத்தரவு
- பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.
- இதையடுத்து பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார்.
- ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ், ஜார்கண்ட் ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- சத்தீஸ்கரின் ஆளுநராக ராமன் தேகா, மேகாலயா ஆளுநராக சி.எச் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தெலங்கானா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் இருந்தார்.
- தற்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர்களின் நியமனம், அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.
- போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் இலவச ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய அரசு மானஸ் என்ற சிறப்பு மையத்தை தொடங்கி உள்ளது.
- இந்த மையத்துக்கான இலவச உதவி எண் 1933ஐ தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத் என்கிற மனதின் குரலில் இன்று பேசுகையில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
- மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் மனுபார்க்கர் 3 ஆவது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தார்.
- 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிச் சுற்றிலும், இலக்கை குறிவைத்து சுட்ட அவர், 221.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான பதக்க கணக்கையும் அவர் தொடக்கி வைத்தார்.
- ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் 22 வயதான மனு பாக்கர் படைத்தார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை தென் கொரிய வீராங்கனைகள் வென்றனர்.