18th, 19th, 20th, 21st JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுப்பு
- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது. அதில், தங்க மூக்குத்திகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், பாசி மணிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றன.
- அதன் பிறகு அரண்மனை மேடுபகுதியின் தெற்கில் 2-ம் கட்ட அகழாய்வு ஜூன் 18-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
- தொடர்ந்து 6 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையிலானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்நிலையில், ஒரு குழியில் 280செ.மீ நீளமும், 218 செ.மீ அகலமும்கொண்ட செங்கல் தளம் காணப்பட்டது. மேலும், சுமார் 2 செ.மீ நீளமுள்ள 5 செம்பு ஆணிகள், செம்புஅஞ்சன கோல்(மைதீட்டும் குச்சி),கண்ணாடி வளையல்கள், கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.
- இதுவரை இரும்பு ஆணிகளே கிடைத்து வந்த நிலையில், தற்போது செம்பு ஆணிகள் கிடைத்திருப்பது வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து, இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனைக் கிடைக்கப்பெற்றது. இக்கொழுமுனை 1.3 கிலோ எடையும் 32 செ.மீ நீளமும் 3 செ.மீ தடிமனும் கொண்டிருந்தது.
- மேலும், சுடுமண் முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், கண்ணாடி வளையல் துண்டுகள், வட்டச்சில்லுகள், தக்களி ஆகிய சங்க காலம் என்றழைக்கப்படும் தொடக்க வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- தற்போது, சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108 செ.மீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளில் முறையே[ந்]தை பாகஅந், ஊகூர், [சா]த்தன் என பொறிக்கப்பட்டுள்ளன.
- பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால் பானை ஓடுகளில் பெரும்பாலும் ஆட்பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
- உறையூர் பானை ஓட்டில் மூலனபேடு என்ற ஊர்ப்பெயர் கிடைக்கப்பெற்றது. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது.
- இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024-ன் கருப்பொருளான 'எதிர்காலம் இப்போது' என்ற தலைப்பை மத்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று வெளியிட்டார்.
- தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி, ஐஎம்சி 2024 ஆகியவற்றின் இதயத்தில் இந்தியா எவ்வாறு நிற்கிறது என்பதைக் குறிக்கிறது, இது உலகளாவிய தலைவர்கள், தொலைநோக்காளர்கள், முன்னோடிகள் மற்றும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கிறது.
- இன்று நமது உலகை மாற்றியமைக்கும் தொழில்நுட்பங்களை ஒத்துழைக்கவும், தீவிரமாக வடிவமைக்கவும் இது உதவுகிறது.
- மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் புதுமையான கனிம வேட்டை நுட்பங்களை மையமாகக் கொண்ட கனிம ஆய்வு ஹேக்கத்தானை தொடங்கி வைத்தார்.
- இந்த நிகழ்ச்சியில் பீகார் துணை முதலமைச்சர் திரு. விஜய்குமார் சின்ஹா கலந்து கொண்டார். சுரங்க அமைச்சகத்தின் பிரமுகர்கள், மாநில அரசு அதிகாரிகள், அரசு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- ஹேக்கத்தான் புவி இயற்பியல் தரவுகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.