17th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிதி ஆயோக் குழுவில் மாற்றம்
- நிதி ஆயோக் என்பது இந்தியாவில் செயல்பட்ட திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு. இதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு கடந்த மாதம் பதவியேற்றது.
- இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நிதி ஆயோக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் கே பெரி தொடர்ந்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தை நல மருத்துவர் வி.கே.பால் மற்றும் மேக்ரோ பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோரும் அரசாங்க சிந்தனைக் குழுவின் முழுநேர உறுப்பினர்களாகத் தொடர்வார்கள்.
- பிவிஆர் சுப்ரமணியம் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான்கு அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நரேந்திர சிங் தோமருக்குப் பதிலாக, நிதி ஆயோக் அதிகாரப்பூர்வ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மற்ற அதிகாரப்பூர்வ உறுப்பினர்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜேபி நட்டா, எச்.டி.குமாரசாமி, ஜிதன் மஞ்சி ராம், லாலன் சிங் வீரேந்திர குமார், ஜுவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சிராக் பஸ்வான், கிஞ்சிரப்பு ராம் மோகன் நாயுடு, ராவ் இந்தர்ஜித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
- முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களாக இருந்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் இந்த முறை பட்டியலில் இல்லை. முன்னதாக நிதின் கட்கரி, வீரேந்திர குமார் மற்றும் ராவ் இந்தர்ஜித் சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தனர்.
- தாந்தி-தந்த்வா என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த ஜாதியை கடந்த 2015-ஆம் ஆண்டு எஸ்.சி.பட்டியலில் சோ்த்து பிகாா் மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதனை எதிா்த்து பாட்னா உயா்நீதிமன்றத்தில் ஒரு தரப்பினா் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
- இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து வந்த நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அரசமைப்புச் சட்டத்தின் 341 பிரிவின்படி எஸ்.சி. பிரிவு ஜாதிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
- இதில் கூடுதலாக சில ஜாதிகளைச் சோ்ப்பது உள்பட எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் கிடையாது’ என்று தீா்ப்பளித்தது.