
16th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக ஆர். மகாதேவன் மற்றும் என்.கோட்டீஸ்வர் சிங் நியமனம்
- ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
- இந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக D. கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த இரு இடங்களும் நிரப்பப்பட்டுவிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகள் கூட்டமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் சுகாதார ஆராய்ச்சி தொடர்பான "முன் மருத்துவ கட்டமைப்பு வசதியை" மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஃபரிதாபாத்தில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவுடன், மண்டல உயிரி தொழில்நுட்ப மையத்தில், தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளின் கூட்டமைப்பின் கீழ் ஆசியாவின் முதலாவது சுகாதார ஆராய்ச்சி தொடர்பான முன் மருத்துவ வசதியை இன்று தொடங்கி வைத்தார்.
- தொற்றுநோய் தயார்நிலை கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பு, பிஎஸ்எல் 3 நோய்க்கிருமிகளைக் கையாளும் திறனின் அடிப்படையில் ஃபரிதாபாத்தில் உள்ள சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தை முன் மருத்துவ கட்டமைப்பு ஆய்வகமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
- இது உலகில் இதுபோன்ற ஒன்பதாவது கட்டமைப்பு ஆய்வகமாகவும், ஆசியாவிலேயே முதல் ஆய்வகமாகவும் திகழ்கிறது. மற்ற ஆய்வகங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகியவற்றில் அமைந்துள்ளன.