15th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி
- 2024, ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்த (வணிக, சேவைகள் இணைந்தது) ஏற்றுமதி 65.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.40 சதவீதம் அதிகமாகும்.
- 2024, ஜூன் மாதத்திற்கான மொத்த (வணிக, சேவைகள் இணைந்தது) இறக்குமதி 73.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.29 சதவீதம் அதிகமாகும்.
- வணிகப்பொருட்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தில் 35.20 பில்லியன் அமெரிக்க டாலரைப் பதிவு செய்தது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2.55 சதவீதம் அதிகமாகும்.
- பெட்ரோலியம் அல்லாத, மணிக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அல்லாத பொருட்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தில் 27.43 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2023, ஜூன் மாதத்தைவிட, 10.27 சதவீதம் அதிகரித்து 2024, ஜூன் மாதத்தில் 9.39 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தின் 2.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 16. 91 சதவீதம் அதிகமாகும்.
- மருந்துகள் ஏற்றுமதி 2023, ஜூன் மாதத்தை விட, 9.93 சதவீதம் அதிகரித்து 2024, ஜூன் மாதத்தில் 2.47 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. காஃபி ஏற்றுமதி 2023, ஜூன் மாதத்தை விட, 70.02 சதவீதம் அதிகரித்து 2024, ஜூன் மாதத்தில் 0.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
- இயற்கை மற்றும் செயற்கை ரசாயனம் பொருட்களின் ஏற்றுமதி 2024, ஜூன் மாதத்தில் 2.29 பில்லியன் அமெரக்க டாலராக இருந்தது இது 2023, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 3.32 சதவீதம் அதிகமாகும்.
- இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 ஜூன் மாதத்தில் வருடாந்தர பணவீக்க விகிதம் 3.36% ஆக உள்ளது (தற்காலிகமானது).
- 2024 ஜூன் மாதத்தில் உணவுப் பொருட்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.
- மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2024 ஜூன் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண் 0.39% ஆக இருந்தது.
- 2024 ஏப்ரல் மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 ஏப்ரல் மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்துப் பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 152.9% மற்றும் 1.19% ஆக இருந்தது.
- நிகழாண்டு சீசனின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பந்தயமான விம்பிள்டன் லண்டனில் நடைபெற்றது. இதில் அனுபவம் வாய்ந்த 37 வயதான ஜோகோவிச், நடப்பு சாம்பியனும் 21 வயதான இளம் வீரர் அல்கராஸுடன் மோதினார்.
- விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 6-2. 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் அல்கராஸ். கடந்தாண்டு விம்பிள்டனிலும் அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
- இது அவருக்கு 4ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். பிரெஞ்சு ஓபன்-விம்பிள்டன் என தொடா் இரட்டைப் பட்டம் வென்ற 6-ஆவது வீரா் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் அல்கராஸ்.
- ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதின.
- ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து இரண்டாம் பாதி தொடங்கிய உடனே, 47வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் கோல் அடித்தார்.
- இதனால் ஸ்பெயின் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், ஸ்பெயின் எளிதில் வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கோல் பால்மர் அபாரமாக கோல் அடித்து ஸ்கோரை சமன் செய்தார்.
- இதனால் கடந்த முறை போல் இம்முறையும் போட்டி சமனில் முடிந்து, பெனால்டி முறையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
- அப்போது ஸ்பெயின் அணியில் சப்ஸ்டியூட் வீரராக களத்திற்கு வந்த மைக்கேல் ஓயர்சபால் 86வது நிமிடத்தில் ஒருகோல் அடித்தார்.
- ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இங்கிலாந்து அணி கடுமையாக முயற்சித்தும் கோல் அடிக்க முடியாததால், ஸ்பெயின் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்காவது முறையாக யூரோ கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றியது.
- கடந்த ஜூன்-21 ம் தேதி தொடங்கிய இந்த கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதி போட்டியானது இன்று (ஜூலை-15) புளோரிடாவில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியும், கொலம்பியா அணியும் மோதியது.
- இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கடுமையாக முயற்சி செய்தும் நிர்ணயித்த 90'நிமிடங்களில் ஒரு கோலை கூட அடிக்க முடியாமல் திணறினார்கள்.
- 112வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் வீரரான லாட்டாரோ மார்டினெஸ் மிரட்டலான கோலை அடித்தார். இதனால் அர்ஜென்டினா அணி ஆட்ட நேர முடிவில் திரில்லாக 1-0 என கொலம்பியாவை வீழ்த்தி இறுதி போட்டியை வெற்றி பெற்று சாம்பியனானது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு கோப்பா அமெரிக்கா தொடர் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
- கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், இந்த வெற்றியின் மூலம் 16-வது முறையாக கோப்பா அமெரிக்கா தொடரை கைப்பற்றி அசத்தி இருக்கிறது அர்ஜென்டினா.