12th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை இரண்டாக பிரிக்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. தற்போது டான்ஜெட்கோவை இரண்டாக பிரித்த தமிழக அரசின் ஆணைக்கு ஒன்றிய எரிசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், இனிமேல் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் (TNPDCL) மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் (TNGECL) என இரண்டாக செயல்படும்.
- கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஜூன் 25ம் தேதியில் எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்தார். சுதந்திர இந்தியா வரலாற்றில் எமெர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள் என இன்று வரை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
- இந்நிலையில் இந்த தினத்தை அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் ஜூன் மாதம் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
- நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், வடகிழக்கு பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் போக்குவரத்து மேம்பாட்டு அம்சத்தின் கீழ் 118.756 கிலோமீட்டர் நீளமுள்ள 42 சாலைகளை அமைக்க ரூ. 114.32 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன் மூலம் மாநிலத்தில் 47 பழங்குடியின பகுதிகளுக்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற சாலை இணைப்பு வழங்கப்படும்.
- வடகிழக்கு மாநிலங்களில் கிராமப்புற போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அசாம் மாநிலத்திற்கு ரூ.378.68 கோடி செலவில், பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 563.67 கிலோமீட்டர் நீளமுள்ள 78 சாலைகள், 14 பாலங்களை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் சமூக-பொருளாதார நிலை மேம்படுவதோடு, தொலைதூர கிராமங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும்.
- ஒருங்கிணைந்த சரக்குப்போக்குவரத்து பரிமாற்ற தளத்தை (ULIP) மேலும் பயனுள்ளதாக்கும் நோக்கத்தோடு, குஜராத்தின் சரக்குப் போக்குவரத்துப் பரப்பளவை டிஜிட்டல் மயமாக்க, தேசிய தொழில் வழித்தட வளர்ச்சிக் கழகம், சரக்குப்போக்குவரத்து தரவு சேவை நிறுவனம் மற்றும் குஜராத் உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரியத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
- இந்த ஒருங்கிணைப்பு, சரக்குப்போக்குவரத்து நடவடிக்கைகள் சீர் செய்யப்படுவதை காட்சிப்படுத்துவதோடு, பல்வேறு மாநில துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகப்படுத்தி, தரவு நுண்ணறிவு மூலமாக முடிவெடுக்கும் நடைமுறைகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த விரிவான எந்திரம், மாநிலம் முழுவதும் சரக்குப்போக்குவரத்து செயல்பாடுகளை திறமையான முறையில் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.