Type Here to Get Search Results !

10th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


10th JULY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்ட முதன்மை ஆலோசகராக சௌமியா சுவாமிநாதன் நியமனம்
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்துக்கான முதன்மை ஆலோசகராக டாக்டா் செளமியா சுவாமிநாதன் சமூக நலன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளாா். 
  • நாட்டில் காசநோயை வேரறுப்பதற்கான இலக்குகளை அடைவதற்கான உத்திகள் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை அவா் அரசுக்கு வழங்குவாா். 
  • கொள்கைரீதியான வழிகாட்டுதல்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தத் தேவையான மாற்றங்களையும் டாக்டா் சௌமியா சுவாமிநாதன் பரிந்துரைப்பாா்.
  • மேலும், காச நோய் ஆராய்ச்சி குறித்த ஆலோசனையை வழங்குவதிலும், சா்வதேச மருத்துவ நிபுணா் குழுக்களை அமைப்பதிலும் அவா் பங்களிப்பை வழங்குவாா்.
  • காச நோய் தடுப்பில் மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து அவா் பணியாற்றவுள்ளாா்.
இந்தியா-ரஷியா வா்த்தகத்தை ரூ.8.35 லட்சம் கோடியாக உயா்த்த உடன்பாடு
  • இரண்டு நாள் பயணமாக ரஷியா சென்ற பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் புதினுடன் இரு நாடுகளிடையேயான 22-ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டாா். 
  • அப்போது, இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, 9 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன.
  • இரு நாடுகளிடையே சிறப்பு மற்றும் முக்கிய துறைசாா்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, வா்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியம் குறித்து இந்த உச்சி மாநாட்டில் இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
  • அதன்படி, வா்த்தகம், அந்தந்த நாட்டு ரூபாய்களில் வா்த்தகத்தை ஊக்குவிக்கவும், வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் உள்ளிட்ட புதிய வழித்தடங்கள் மூலமாக சரக்குகள் கையாளுதலை அதிகரிக்கவும், வேளாண் பொருள்கள், உணவு மற்றும் உர வா்த்தக அளவை உயா்த்தவும், அணுசக்தி உள்ளிட்ட எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தைகளை வலுப்படுத்துவது, எண்ம பொருளாதாரத்தில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் கூட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், மருந்து விநியோகம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • முதலீடுகளை ஊக்குவிப்பது, வா்த்தகத்துக்கு அந்தந்த நாட்டு ரூபாய்களை பயன்படுத்துவது, எரிசக்தி முதல் வேளாண் துறைகள் வரையிலும் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா - ரஷியா இடையேயான வா்த்தகத்தை ரூ. 8,35,037 கோடியாக (100 பில்லியன் டாலா்) உயா்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • குறிப்பாக, ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் போன்ற பொருள்களுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தவும், அதுபோல, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ரஷியாவின் ரூபெல்லில் பணம் செலுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • பரஸ்பர மற்றும் சா்வதேச எரிசக்தி பாதுகாப்பை எளிதாக்கவும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, கல்வி சாா்ந்த பரிமாற்றங்கள், உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி உளளிட்ட கூட்டுத் திட்டங்களில் முதலீடுகளை ஊக்குவிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
  • இதுபோல, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக இரு நாடுகளிடையே 9 ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின.
  • மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக ‘பூஜ்யம்’ சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்த இரு நாடுகளும், பயங்கரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, தைவான் இடையே இயற்கை வேளாண் பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம்
  • இந்தியா, தைவான் இடையே இயற்கை வேளாண் பொருட்களுக்கான பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் புதுதில்லியில் தைவானுடனான வர்த்தகம் குறித்த 9வது பணிக்குழு கூட்டத்தின் போது 2024 ஜூலை 8 முதல் செயல்படுத்தப்பட்டது. 
  • இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையிலான இந்த ஒப்பந்த செயலாக்கம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஏனெனில் இது இயற்கை வேளாண் பொருட்களுக்கான முதல் இருதரப்பு ஒப்பந்தமாகும்.
  • இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தைவானின் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் மற்றும் உணவு முகமை ஆகியவை இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தும் முகமைகளாகும்.
  • பரஸ்பர அங்கீகாரம் இரட்டை சான்றிதழ்களைத் தவிர்ப்பதன் மூலம் இயற்கை வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை எளிதாக்கும்; இதனால், இணக்க செலவைக் குறைத்தல், ஒற்றை ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பதன் மூலம் இணக்கத் தேவையை எளிதாக்குதல், இயற்கை வேளாண்மை துறையில் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துதல்.
  • அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவு, பச்சை/கருப்பு, மூலிகை தேயிலை, மருத்துவ தாவர பொருட்கள் போன்ற முக்கிய இந்திய இயற்கை வேளாண் பொருட்களை தைவானுக்கு ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel