8th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஏப்ரல் 2024க்கான நுகர்வோர் விலைக் குறியீடு
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024க்கான நுகர்வோர் விலைக் குறியீடு இன்று வெளியிட்டது.
- மார்ச் 2023ல் 5.79 சதவிகிதமாக ஆக இருந்த பணவீக்கம் 2024 மார்ச் மாதம் ஒப்பிடும்போது 4.20 சதவிகிதமாக இருந்தது. 2024 ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் 3.87 சதவிகிதமாகவும், இது 2023 ஏப்ரலில் ஒப்பிடும்போது 5.09 சதவிகிதமாக இருந்தது.
- பிப்ரவரி, 2023ல் இருந்த 6.16 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில், 2024 பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் 4.90 சதவீதமாக உள்ளது என்று தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது நாட்டின் 88 தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் பரவியுள்ள 317 சந்தைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டைத் தொகுத்து வருகிறது. அதே வேளையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாதங்களுக்கான குறியீடுகள் அறிக்கையில் வெளியிடப்பட்டது.
- பிப்ரவரி 2024 க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.3 புள்ளிகள் அதிகரித்து 139.2 புள்ளிகளாக இருந்தது. 2024 மார்ச் மாதத்திற்கான குறியீடு 0.3 புள்ளிகள் குறைந்து 138.9 புள்ளிகளாக இருந்தது. ஏப்ரல் 2024 க்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4 ஆக உள்ளது.
- நார்வேயில் நடைபெற்ற சர்வதேச செஸ் தொடரில் ஐந்து முறை உலக சாம்பியன் வென்ற மேக்னஸ் கார்ல்சன் (நார்வே), நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் (சீனா), இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்றனர்.
- 10 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், ஆடவர் பிரிவில் மேக்னஸ் கார்ல்சென் 17.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் மோதிய கார்ல்சென் கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானுக்கு சென்றது.
- அதில் வென்ற கார்ல்சென் நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை 6ஆவது முறையாகக் கைப்பற்றினார். கார்ல்சென் 17.5 புள்ளிகளுடன் முதலிடம் நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2ஆவது இடமும் இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரென் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.
- 2016ஆம் ஆண்டு முதன்முறையாக நார்வே செஸ் கிளாசிக்கல் கேமில் பட்டம் வென்ற கார்ல்சென் தொடர்ந்து 2019, 2020, 2021, 2022, 2024இல் பட்டம் வென்றுள்ளார். இடைப்பட்ட 2023ஆம் ஆண்டில் மட்டும் ஹிகரு நகமுரா பட்டத்தை வென்றார்.
- மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5ஆவது இடமும் பிடித்துள்ளனர்.