7th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
காங்கிரஸின் 100-வது எம்.பி
- காங்கிரஸ்காரரான விஷால் படேலுக்கு கூட்டணி பேச்சுவார்த்தையால் சங்லி தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனை வேட்பாளர் அதே தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.
- விஷால் பாட்டில் கட்சியின் முடிவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
- அவரது பெயரை பரிந்துரைத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்வஜீத் கடம், விஷாலின் ஆதரவில் காங்கிரஸின் பலம் மக்களவையில் 100 ஆக உயருமென தெரிவித்துள்ளார்.
- விஷால் பாட்டில் மற்றும் எம்எல்ஏ விஷ்வஜீத் கடம் வியாழக்கிழமை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்தனர். கார்கேவிடம் தனது ஆதரவு கடிதத்தை அளித்தார் பாட்டில்.
- முன்னாள் முதல்வர் வசந்த்தாதா பாட்டிலின் பேரனான விஷால் பாட்டில். தனித்து நின்று பாஜகவின் இரண்டு முறை எம்பி சஞ்சய்காகா பாட்டிலை தோற்கடித்துள்ளார்.
- ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக நாடுகளை தேர்வு செய்ய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கெடுப்பில் மொத்தம் ஐந்து நாடுகள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் உறுப்பினர் பதவிக் காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
- பாகிஸ்தான், சோமாலியா, டென்மார்க், கிரீஸ், பனாமா ஆகிய ஐந்து நாடுகள் ஐ. நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- இந்த நாடுகளின் பதவிக் காலம் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கி 2026ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது. முன்னதாக பொறுப்பில் இருந்த ஈக்குவடார், ஜப்பான், மால்டா, மொசாம்பி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை பதிலீடு செய்யவுள்ளன.
- இந்நிலையில் பாகிஸ்தான் ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரானது பெருமைக்குரிய நிகழ்வு என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் கூறியுள்ளார்.
- பாகிஸ்தான் 8வது முறையாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மேலும் ஐநாவின் புதிய தலைவராக கேமரூன் நாட்டின் முன்னாள் பிரதம அமைச்சர் பிலிமோன் யாங் பொது அவையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.