Type Here to Get Search Results !

30th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


30th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி விகிதம் சரிவு
  • 2004-05-ஆம் நிதியாண்டு முதல் 2013-14-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதியின் கூட்டு வருடாந்திர வளா்ச்சி விகிதம் (சிஏஜிஆா்) 21.48 சதவீதமாக இருந்தது. அது, 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 2023-24-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் வெறும் 2.49 சதவீதமாகக் குறைந்துள்ளது. 
  • அதுமட்டுமின்றி, 2004-05-ஆம் நிதியாண்டு முதல் 2013-14-ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதியின் சிஏஜிஆா் பங்களிப்பு 13.94 சதவீதமாக இருந்தது. அது, அடுத்த 10 ஆண்டுகளில் சுமாா் -2.29 சதவீதமாகக் குறைந்துள்ளது. 
  • உள்நாட்டு நிலக்கரி வளங்களை மேம்படுத்துதல், நிலக்கரி பயன்பாட்டில் புதுமையான தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் 2014-24 காலகட்டத்தில் நாடு எரிசக்தி பாதுகாப்பில் தன்னிறைவை நோக்கி முன்னேற்றம் கண்டுவருகிறது. 
  • அதன் வெளிப்பாடாகவே நிலக்கரி இறக்குமதி சிஜிஆா் சரிவைக் கண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முன்னதாக, இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 13.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
  • 2023-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2.31 கோடி டன்னாக இருந்த நாட்டின் நிலக்கரி இறக்குமதி கடந்த ஏப்ரலில் 2.61 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • மதிப்பீட்டு மாத மொத்த இறக்குமதியில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.74 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2023 ஏப்ரலில் 1.52 கோடி டன்னாக இருந்தது.கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 47.7 லட்சம் டன்னிலிருந்து 49.7 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
  • முந்தைய மாா்ச் மாத்தில் நிலக்கரி இறக்குமதி 2.40 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாத நிலக்கரி இறக்குமதி 8.93 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமைச்சகம் கூறியிருந்தது.
  • 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 7.7 சதவீதம் அதிகரித்து 26.82 கோடி டன்னாக இருந்தது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 24.91 கோடி டன்னாக இருந்தது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா
  • ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் விராத் கோஹ்லி அபாரமாக பேட்டிங் செய்து 76 ரன்கள் எடுத்தார்.
  • அதன்பின் 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
  • இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
  • இந்த சந்தோஷ தருணத்தோடு இந்திய நட்சத்திர வீரர்கள் ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருமே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel