29th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஊத்தங்கரை அகழாய்வு பணியில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுப்பு
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் தக்களி போன்ற தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
- இன்று (28.06.2024) ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கொழுமுனையின் எடை 1.292 கி.கி ஆகும். இதன் நீளம் 32 செ.மீ அகலம் 4.5 செ.மீ மற்றும் தடிமன் 3 செ.மீ கொண்டு காணப்படுகிறது.
- இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவாசாயம் மேற்கொள்ள ஏர்கலப்பையில் கொழு முனையாக பயன்பட்டிருக்கலாம். இப்பொருள் கிடைத்த தொல்லியல் சூழலைக் கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாற்றுக் காலமாக இருக்கலாம்.
- தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்பாக கள்ளச் சாராய விற்பனைக்கு தண்டனையை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
- கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்கப்படுவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் ஜூன் 20 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இந்த பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் அளித்து புதிய அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளனர்.
- அந்தவகையில் திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கோரி அமைச்சர் கே.என்.நேரு முன்வரைவை தாக்கல் செய்து இருந்தார். இந்த முன்வரைவு, இன்று சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
- சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் 2ஆம் நாளில் தனது முதல் இன்னிங்ஸில் 603 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது இந்திய மகளிரணி.
- ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய மகளிரணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு மகளிரணியும் டெஸ்ட்டில் 600 ரன்களை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமான ரன்னாக இருந்தது.