
19th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- பீகார் மாநிலத்தில் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
- பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
- அசல் நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் முதல் குடியிருப்பு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நாளந்தாவின் இடிபாடுகள் 2016-ம் ஆண்டில் ஐ.நா பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
- கடந்த நிதியாண்டான 2023-24-ம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் இந்தியா ரூ.60,523.89 கோடி (7.38 பில்லியன் டாலர்) மதிப்பிலான 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது.
- பதப்படுத்தப்பட்ட இறால் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக இருந்தது. அமெரிக்காவும் சீனாவும் இந்திய கடல் உணவுப் பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்களாக இருந்தன. 2023-24-ம் நிதியாண்டில், அளவின் அடிப்படையில் ஏற்றுமதி 2.67 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதி மட்டும் ரூ.40,013.54 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட மீன் இரண்டாவது பெரிய கடல் உணவு ஏற்றுமதிப் பொருள் என்ற இடத்தைப் பிடித்தது. இதன் ஏற்றுமதி ரூ.5,509.69 கோடி மதிப்புக்கு மேற்கொள்ளப்பட்டது.
- முந்தைய 2022-23-ம் நிதியாண்டில், மொத்தம் 17,35,286 மெட்ரிக் டன் கடல் உணவை இந்தியா ஏற்றுமதி செய்தது.