14th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 மே மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் வெளியீடு
- அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 மே மாதத்தில் (மே, 2023-ஐ விட அதிகரித்து) வருடாந்தர பணவீக்க விகிதம் 2.61% ஆக உள்ளது (தற்காலிகமானது).
- 2024 மே மாதத்தில் உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, கனிம எண்ணெய்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.
- மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 2024 மே மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.20% ஆக இருந்தது.
- 2024 மார்ச் மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 மார்ச் மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்துப் பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.4% மற்றும் 0.26% ஆக இருந்தது
- தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மைச் செயலராக பிகே மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதமரின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை அப்பதவியில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும், அஜித் தோவல், பிகே மிஸ்ராவுக்கு கேபினட் அமைச்சர்கள் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் அமித் காரே, தருண் கபூர் ஆகியோர் பிரதமரின் ஆலோசகர்களாக மறு நியமனம் செய்யப்படுவதாகவும் அமைச்சரவை நியமனங்களுக்கான குழுவானது உறுதிப்படுத்தியுள்ளது.
- ஜூன் 10 தொடங்கி இவர்களது பதவிக் காலம் 2 ஆண்டுகள் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மத்திய அரசு செயலாளர்கள் பதவி அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தொழில் வளா்ச்சியடைந்த உலகின் 7 முக்கிய முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஜி7.
- அதன் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் 50-ஆவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணம், பசானோ நகரில் வியாழக்கிழமை (13.06.2024) தொடங்கியது.
- இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்குகிறாா். இது தவிர, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜொ்மனி பிரதமா் ஓலஃப் ஷால்ஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனா்.
- ஜி7 அமைப்பின் ‘எண்ணிக்கையில் சோ்க்கப்படாத’ உறுப்பினராகத் திகழும் ஐரோப்பிய யூனியன் சாா்பில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மிஷெல் ஆகியோா் மாநாட்டில் பங்கேற்கின்றனா்.
- மாநாட்டின் சிறப்பு அழைப்பாளா்களாக இந்திய பிரதமா் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, துருக்கி அதிபா் எா்டோகன் உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவா்களும் கத்தேலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸும் கலந்துகொள்கின்றனா்.
- ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், உலக வங்கி தலைவா் அஜய் பாங்கா, சா்வதேச நிதியத் தலைவா் கிறிஸ்டாலினா ஜாா்ஜியேவா உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளின் தலைவா்களும் இந்த மாநாட்டில் விருந்தினா்களாகக் கலந்துகொள்கின்றனா்.
- வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் காஸா போா், உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு 5,000 கோடி டாலா் (சுமாா் ரூ.4.18 லட்சம் கோடி) கடனுதவி அளிக்க ஜி7 மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமை உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.