Type Here to Get Search Results !

12th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


12th JUNE 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழக முதல்வர் ஸ்டாலின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்தார்
  • 'தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
4வது முறையாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார் 
  • நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது.
  • ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ பாஜக பவன் கல்யாண் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது.
  • இந்த நிலையில் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இதையடுத்து இன்று விஜயவாடா விமான நிலையம் அருகே இருக்கும் கேசரப்பள்ளி என்ற பகுதியில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது. 
  • இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ பி நட்டா, உள்ளிட்டோரும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • தொடர்ந்து ஆந்திராவின் முதலமைச்சர் ஆக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார். அவருடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
ஒடிசாவின் புதிய முதல்வரானார் மோகன் சரண் மாஜீ
  • ஒடிசாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சரண் மாஜீ (52) இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவரும் துணை முதல்வா்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
  • ஆளுநர் ரகுபர் தாஸ், முதல்வர், துணை முதல்வர்கள், மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
  • புவனேசுவரத்தில் உள்ள ஜனதா இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார்.
  • கியோஞ்சா் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தோ்வான சரண் மாஜீ, பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா். இவர் இன்று ஒடிசாவின் 15வது முதல்வராக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
  • ஒடிசாவில் மக்களவையுடன் சோ்த்து அந்த மாநிலப் பேரவையின் 147 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. இதில், 78 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சியமைத்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6% - உலக வங்கி கணிப்பு
  • 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 20 அடிப்படைப் புள்ளிகளால் 6.4 சதவீதமாக இருக்கும் என ஜனவரியில் கணிக்கப்பட்டிருந்த நிலையில், பொது மற்றும் தனியாா் துறை முதலீடு அதிகரிப்பு, நுகா்வோா் தேவையில் முன்னேற்றம் ஆகியவற்றால் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதம்வரை வலுவான வளா்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளது உலக வங்கி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel