9th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஏற்பாடு செய்த 'உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்' குறித்த தேசியக் கருத்தரங்கு மற்றும் தொழில்துறை சந்திப்பை பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு கிரிதர் அரமானே 2024, மே 09 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
- ஆயுதப்படைகள், கல்வியாளர்கள், தொழில்துறை மற்றும் டிஆர்டிஓ ஆகியவற்றின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி, உரையாடலை வளர்ப்பது, அறிவைப் பரிமாறிக்கொள்வது மற்றும் 'தற்சார்பு இந்தியா' என்ற பார்வைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.