7th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புதுதில்லியில் இந்திய தொழில் வர்த்த சபையுடன் இணைந்து மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024-ஐ மருந்தியல் துறை செயலாளர் தொடங்கி வைத்தார்
- மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துப் பொருட்கள் துறை செயலாளர் டாக்டர் அருணீஷ் சாவ்லா, இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ)யுடன் இணைந்து மருந்து தொழில்நுட்பத் திட்டம் 2024-ஐ புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
- மருந்து தொழில்நுட்பத் திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சாதனங்களின் விரிவான மதிப்பு சங்கிலி பகுப்பாய்வை மேற்கொள்வதன் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் மருந்து தொழில்நுட்பத் துறையில் மாறக்கூடிய அம்சத்தை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பான முயற்சியாகும்.
- தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் நெருக்கமான ஆலோசனை மூலம் இத்திட்டம், முக்கியமான சவால்களை எதிர்கொள்வது, உள்நாட்டு உற்பத்தியை வளர்ப்பது மற்றும் இறக்குமதி சார்புநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மருந்து தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகளாவிய தலைமைத்துவமாக நிலைநிறுத்துகிறது.
- ராணுவ கமாண்டர்களின் ஆறாவது மாநாடு புனேயில் உள்ள ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் 2024, மே 07 அன்று நடைபெற்றது.
- ஆயுதப்படை பயிற்சி நிறுவனங்கள், போர் கல்லூரிகளின் தளபதிகள், ஆயுதப்படைகளின் பிற உயரதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்திய ஆயுதப்படைகளில் எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்க எதிர்கால பாதுகாப்பு உத்திகளுக்கான வழிமுறையை வகுப்பது குறித்து விவாதித்தனர்.
- தங்களுடைய நுண்ணறிவுகள், நிறுவனங்களில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர். எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள படைகளை உருவாக்குவதற்கான திட்டமிடல் குறித்து விவாதித்தனர்.
- வளர்ந்து வரும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் தொடர்ச்சியான முன்னேற்றம், புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான இந்திய ஆயுதப் படைகளின் உறுதிப்பாட்டை இந்த முக்கிய நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.