6th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
- ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சய குமார் மிஸ்ராவுக்கு மத்திய நிதி, பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
- ஓய்வு பெற்ற நீதிபதி மிஸ்ராவின் நியமனம், ஜிஎஸ்டி தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கியமான அமைப்பான ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
- ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் என்பது மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம், 2017-ன் கீழ் நிறுவப்பட்ட மேல்முறையீட்டு ஆணையமாகும்.
- இது முதலாவது மேல்முறையீட்டு அதிகாரியின் உத்தரவுகளுக்கு எதிரான அந்தந்த மாநில / யூனியன் பிரதேசங்கள் ஜிஎஸ்டி சட்டங்களின் கீழ் பல்வேறு மேல்முறையீடுகளை விசாரிக்க உள்ளது.
- ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலின்படி, புதுதில்லியில் அமையவுள்ள முதன்மை அமர்வையும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 31 மாநில அமர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
- நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்கள் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
- உயர் நீதிமன்றங்களின் சுமையை கணிசமாகக் குறைப்பதுடன், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான, நியாயமான, பயனுள்ள தீர்வை தீர்ப்பாயம் உறுதி செய்யும்.
- ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிறுவப்படுவது இந்தியாவில் ஜிஎஸ்டி அமைப்பின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதோடு, நாட்டில் மிகவும் வெளிப்படையான மற்றும் திறமையான வரி சூழலை வளர்க்கும்.
- ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி மிஸ்ரா ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார்.
- மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா மற்றும் கானா குடியரசுக்கான இந்திய தூதர் திரு மணீஷ் குப்தா மற்றும் வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் திருமதி பிரியா பி. நாயர் ஆகியோர் அக்ராவில் கானா நாட்டு சக வர்த்தக அதிகாரிகளுடன் கூட்டு வர்த்தகக் குழு கூட்டத்தை 2024, மே, 2-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை நடத்தினார்கள்.
- கானா குடியரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் மைக்கேல் ஒக்யேர் – பாஃபி, வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு. அமர்தீப் சிங் பாட்டியா ஆகியோர் இக்கூட்டத்திற்கு இணைத்தலைமை வகித்தனர்.
- இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இரு தரப்பினரும் விரிவான மறுஆய்வு மேற்கொண்டனர்.
- டிஜிட்டல் உருமாற்றத் தீர்வுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்; உள்ளூர் நாணய தீர்வு அமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழங்கும் வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தனர்.
- இருதரப்பு வர்த்தகம் மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான பல துறைகளை இரு தரப்பினரும் கண்டறிந்தனர்.
- மருந்துகள், சுகாதாரம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சாரத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு, முக்கிய கனிமங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு இதில் அடங்கும்.