31st MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடி
- 2024 ஏப்ரல் நிலவரப்படி மத்திய அரசின் வருவாய் ரூ.2,13,334 கோடியாக இருந்தது. இதில் ரூ1,84,998 கோடி வரி வருவாயாகும். ரூ.27,295 கோடி வரியல்லாத வருவாயாகவும் ரூ.1,041 கோடி கடன் அல்லாத மூலதன வருவாயாகவும் இருந்தது.
- வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கு பகிரப்படும் வகையில், ரூ.69,875 கோடி வழங்கப்பட்டது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.10,735 கோடி அதிகமாகும்.
- மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.4,23,470 கோடியாக இருந்தது. இதில் ரூ.3,24,235 கோடி வருவாய் கணக்கிலும் ரூ.99,235 கோடி மூலதனக் கணக்கிலும் அடங்கும்.
- மொத்த வருவாய் செலவினத்தில் ரூ.1,28,263 கோடி வட்டிக்காக செலுத்தப்பட்டத் தொகையாகும். ரூ.19,407 கோடி மானியங்களாக வழங்கப்பட்டது.
- சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தனியார் பயன்பாட்டுக்கு தேவைப்படும் சிறிய ரக ராக்கெட்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- அதன்படி, அதிகபட்சம் 300கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஏவும் திறன் கொண்ட 'அக்னிபான்' என்ற சிறிய ரக ராக்கெட்டை உருவாக்கியது. முப்பரிமாண (3-டி) பிரின்டிங் முறையில் இதன் செமி-கிரையோஜெனிக் இன்ஜின் வடிவமைக்கப்பட்டது.
- இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானிகள் 45 பேரின் வழிகாட்டுதலில் 200 பொறியாளர்கள் கொண்ட குழுவினர் ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடியில் உள்ள தேசிய எரிபொருள் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமும் அவர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவியது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ளஅக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் அந்த ராக்கெட்டை சோதித்து பார்க்க கடந்த மார்ச் 22, ஏப்ரல் 6, 7, மே 28 என 4 முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினையால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
- இந்நிலையில், 5-வது முறையாக நேற்று காலை 7.15 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- கேரளாவின் கொச்சியில் 2024, மே 20 முதல் மே 30 வரை 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனை மற்றும் 26-வது அண்டார்டிகா சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான குழுக் கூட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
- மைத்ரி-2 என்ற பெயரில் அண்டார்டிகா ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் இந்தியாவின் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
- இந்நிலையில், 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம், 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளுடன் நடைபெற்றது.
- இது அமைதி, அறிவியல் ஒத்துழைப்பு, மனிதகுலத்தின் நலனுக்காக அண்டார்டிகாவைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மற்றும் மூத்த அதிகாரிகள் தொடங்கிவைத்தனர்.