2nd MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு - இஸ்ரோ ஆய்வில் தகவல்
- இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, ஐஐடி கான்பூர், ஐஐடி தான்பாத், கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் இணைந்து நடத்திய ஆய்வில், நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிலவின் மேற்பரப்பிலிருந்து ஒரு சில அடி ஆழத்தில் இருக்கும் பனிக்கட்டிகள், துருவப் பகுதிகளில் இருக்கும் பனிகட்டிகளை விட 5 - 8 மடங்கு பெரியளவில் உள்ளதாகவும், ஆகவே, தென் துருவப் பகுதி மேற்பரப்பை ஆழ்துளையிட்டு அவற்றை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப் பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
- நிலவின் வட துருவப் பகுதிகளில், தென் துருவப் பகுதிகளில் இருப்பதை விட இருமடங்கு அதிகளவிலான நீர், பனிக்கட்டிகளாக உறைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிலவின் தென் துருவப் பகுதிகளில் சுமார் 38,000 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட வாயுக்கள் வெளியேற்றம், இந்த பனிக்கட்டிகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையே இஸ்ரோவின் தற்போதைய ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.
- ஏப்ரல் 2024-க்கான இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 78.69 மில்லியன் டன்னை (தற்காலிகமானது) எட்டியது, முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.41% வளர்ச்சியை பெற்றுள்ளது.
- இது கடந்த ஆண்டில் 73.26 மில்லியன் டன்னாக இருந்தது. ஏப்ரல் 2024-ல், கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) 61.78 மில்லியன் டன் (தற்காலிக) நிலக்கரி உற்பத்தியை அடைந்தது.
- இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7.31% வளர்ச்சியாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57.57 மில்லியன் டன்னாக இருந்தது.
- ஏப்ரல் 2024-ல் இந்தியாவின் நிலக்கரி கையாளுதல் 85.10 மில்லியன் டன்னை (தற்காலிக) எட்டியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.07% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 80.23 மில்லியன் டன் நிலக்கரி கையாளப்பட்டது.
- ஏப்ரல் 2024-ல், சிஐஎல் 64.26 மெட்ரிக் டன் (தற்காலிக) நிலக்கரியை அனுப்பியது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.18% வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இது 62.28 மில்லியன் டன்னாக இருந்தது.