Type Here to Get Search Results !

22nd MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


22nd MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் - தங்கம் வென்றார் தங்கவேலு
  • 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் நாட்டில் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த சுமார் 1,300 பாரா தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 171 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது.
  • T63 பைனலில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் அசத்தினார். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதே சாம்பியன்ஷிப் தொடரில் ஷரத் குமார் கடந்த 1.83 மீட்டர் உயரமே சிறந்த சாதனையாக இருந்தது. இதே பிரிவில் 1.78 மீட்டர் உயரம் தாண்டி நான்காம் இடத்தை பிடித்தார் வருண் சிங். மற்றொரு இந்திய வீரரான பதியர் ஏழாம் இடத்தை பிடித்தார்.
  • கடந்த முறை வெண்கலம் வெல்லும் வாய்ப்பை மாரியப்பன் மிஸ் செய்தார். இந்த சூழலில் நடப்பு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரை 1.74 மீட்டருடன் தொடங்கினார். 1.78 மீட்டர், 1.82 மீட்டர், 1.85 மீட்டர் என படிப்படியாக அதை கூட்டி அசத்தினார். இறுதியாக 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார்.
  • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் அவர் வென்றுள்ள முதல் தங்கம் இது. இந்த தொடரில் இதுவரை இந்தியா மொத்தம் நான்கு தங்கம் வென்றுள்ளது.
திறன் மேம்பாட்டு சங்க சிறப்பு விருது 2024
  • திறன் மேம்பாட்டு சங்க சிறப்பு விருது 2024-ல் 3-வது வரிசையுடன் தேசிய அனல்மின் கழகம் உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது. இது அனைத்து இந்திய நிறுவனங்களிலும் மிக உயர்ந்த தரவரிசையாகும். 
  • கடந்த எட்டு ஆண்டுகளில் ஏழு முறை இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற ஒரே பொதுத்துறை நிறுவனம் தேசிய அனல்மின் கழகம் ஆகும். 
  •  அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 2024, மே 21 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய அனல்மின் கழகத்தின் மனித வளம் மற்றும் திறன் மேலாண்மைப்பிரிவு மேலாளர் திருமதி ரச்சனா சிங் பால் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
  • அமெரிக்காவின் திறன் மேம்பாட்டு சங்கத்தால் நிறுவப்பட்ட இவ்விருதுகள் கற்றல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச அங்கீகாரங்களில் ஒன்றாகும்.
  • இந்த சாதனை சர்வதேச அளவில் மனிதவள மேம்பாட்டில் தேசிய அனல்மின் கழகத்தின் சிறப்பான செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆர். மகா தேவன் நியமனம்
  • சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2023 மே மாதம் 28ம் தேதி எஸ்.வி கங்கா பூர்வாலா பதவியேற்றுக் கொண்டார்.
  • இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஒரு வருடம் பணிபுரிந்த நிலையில் நாளையுடன் அதாவது மே 23ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.
  • இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆர். மகா தேவனை சென்னை உயர் நீதிமன்றம் தலைமை பொறுப்பு நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 
  • மேலும் மே 24ம் தேதி முதல் ஆர். மகாதேவன் தலைமை பொறுப்பு நீதிபதியாக தன்னுடைய பணிகளை கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக திரு வி ரமேஷ் பாபு நியமனம்
  • திரு வி. ரமேஷ் பாபு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக 2024 மே 21 அன்று பதவியேற்றார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங் வழங்கப்பட்டது.
  • திரு வி. ரமேஷ் பாபு, அனல் மின் பொறியியல் துறையில் எம்.டெக் பட்டமும், எந்திரப் பொறியியலில் பி.டெக் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 2020 மே மாதம் முதல் ஓய்வு பெறும் வரை தேசிய அனல் மின் கழக இயக்குநர் (செயல்பாடுகள்) பதவியை வகித்தார். இதற்கு முன் இந்நிறுவனத்தில் அவர் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார்.
  • மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் சட்டம், 1998 விதிகளின் கீழ் இந்திய அரசால் நிறுவப்பட்டது. இந்த ஆணையம், தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel