14th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு 2024
- தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7,534 பள்ளிகளை சேர்ந்த 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8, 20, 207 மாணவர்கள் எழுதினர். இதுதவிர, 5,000 தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.
- இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் - 1 தேர்வு முடிவுகள் இன்று மணிக்கு வெளியானது. மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- இதில் 96.02% பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடமும், 95.56% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடமும், 95.23% பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடமும் பெற்றுள்ளன.
- பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ரமேஷ் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர்.
- அப்போது பழங்காலச் செப்பு நாணயங்கள் இரண்டை அவர்கள் கண்டெடுத்தனர்.
- அவற்றை ஆய்வுசெய்ததில் அவை 15ஆம் நூற்றாண்டு விஜயநகரக் காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது. நாணயத்தின் முன்பக்கத்தில் காளையின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்பக்கத்தில் 'தேவராயர்' என்று தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.
- இதற்கு முன்னரும் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் செப்பு நாணயங்களும் தொல்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த ஆற்றங்கரைப் பகுதிகளில் சங்க காலம் முதல் விஜயநகர காலம் வரை பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
- இதனால், தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகள் பழங்கால மக்களின் வாழ்விடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களாகவும் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
- அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 ஏப்ரல் மாதத்தின் (ஏப்ரல், 2023-ஐ விட) வருடாந்தர பணவீக்க விகிதம் 1.26% ஆக உள்ளது (தற்காலிகமானது).
- 2024 ஏப்ரல் மாதத்தில் முதன்மையான உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.
- மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 மார்ச்சுடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.79% ஆக இருந்தது.
- 2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் 'அனைத்துப் பொருட்களின்' பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.2% மற்றும் 0.20% ஆக இருந்தது.
- 2024 பிப்ரவரி இறுதி எண்ணிக்கை 95.5 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டது. மொத்த விலைக் குறியீட்டெண் குறித்த தற்காலிக புள்ளி விவரங்கள், இறுதி திருத்தக் கொள்கையின்படி திருத்தியமைக்கப்படும்.
- 2024 மே 13 முதல் 15 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெறும் உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு 2024 -ல் முதல் முறையாக இந்தியா தனது சொந்த அரங்கத்தை அமைத்துள்ளது.
- இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்தியாவின் அரங்கு, உச்சிமாநாட்டின் மிகப்பெரிய அரங்கங்களில் ஒன்றாகும்.
- இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு பூபிந்தர் எஸ் பல்லா-வால் மே 12 அன்று திறந்து வைக்கப்பட்டது.
- உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பசுமை ஹைட்ரஜன் துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த மாநாட்டின் இந்திய அரங்கம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது
- இந்தியக் குழுவில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ரயில்வே அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
- பல்வேறு ஜி2ஜி கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் இந்திய தொழில்துறை ஈடுபடுவதற்கான ஒரு தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.
- ஈரானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சபஹர் துறைமுக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவும், ஈரானும் நீண்டகாலமாக முயற்சித்து வந்தன.
- இந்நிலையில் சபஹர் துறைமுகத்தின் ஒரு முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா இயக்குவதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் முன்னிலையில் இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் மற்றும் ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்பு ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இதன்படி சபஹர் துறைமுக மேம்பாட்டு திட்டத்தில் ஷாஹித்-பெஹெஷ்டி முனையத்தை 10 ஆண்டுகள் இந்தியா நிர்வகிக்கும். வெளிநாட்டு துறைமுக நிர்வாகத்தை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.