
13th MAY 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியா பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சி சக்தி 2024
- இந்தியா - பிரான்ஸ் கூட்டு ராணுவப் பயிற்சியின் 7-வது பதிப்பு சக்தி மேகாலயாவின் உம்ரோயில் உள்ள முழுமையாக மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீன வெளிநாட்டு பயிற்சி முனையில் இன்று தொடங்கியது.
- இந்தப் பயிற்சியை 2024, மே 13 முதல் 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியின் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியரி மாத்தூ மற்றும் 51 துணைப் பகுதியின் பொது அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்னா சுதாகர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சக்தி பயிற்சி என்பது இந்தியாவிலும் பிரான்சிலும் மாறி மாறி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடைசி பதிப்பு 2021 நவம்பர் மாதம் பிரான்சில் நடத்தப்பட்டது.
- 90 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் முதன்மையாக ராஜ்புத் ரெஜிமெண்டின் ஒரு பட்டாலியன் மற்றும் பிற ஆயுதப்படை மற்றும் சேவைகளைச் சேர்ந்த வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
- இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படையின் பார்வையாளர்களும் இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக இருப்பார்கள். 90 வீரர்களைக் கொண்ட பிரெஞ்சு படைப்பிரிவில் முக்கியமாக 13-வது வெளிநாட்டு லெஜியன் பிரிகேட் வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.
- இந்தப் பயிற்சியின் போது பயிற்சி செய்யப்பட வேண்டிய தந்திரோபாய பயிற்சிகளில் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தைக் கைப்பற்றுதல், ஒரு கூட்டு கட்டளை நிலையத்தை நிறுவுதல், ஒரு புலனாய்வு மற்றும் கண்காணிப்பு மையத்தை நிறுவுதல், ஒரு ஹெலிபேட் / தரையிறங்கும் இடத்தைப் பாதுகாத்தல், ட்ரோன்கள் மற்றும் எதிர் ட்ரோன் அமைப்புகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை அடங்கும்.
- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் தீக் ஷா 25, பங்கேற்றார்.
- இலக்கை 4 நிமிடம், 4.78 வினாடியில் கடந்து மூன்றாவது பிடித்த உ.பி., வீராங்கனை தீக் ஷா வெண்கலம் வென்றார். இதன்மூலம் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்த இவர், புதிய தேசிய சாதனை படைத்தார்.
- இதற்கு முன் 2021ல் வாராங்கலில் (தெலுங்கானா) நடந்த தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹர்மிலன் பெயின்ஸ் (4 நிமிடம், 05.39 வினாடி) தேசிய சாதனை படைத்திருந்தார்.
- ஐசிசியின் ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரருக்கானப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடி, நமீபியாவின் ஜெர்ஹார்டு எராஸ்மஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது வாசிம் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
- இந்த நிலையில், ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முகமது வாசிம் வென்றுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
- அரபு அமீரக அணியின் கேப்டனான முகமது வாசிமுக்கு ஏப்ரல் மாதம் சிறப்பானதாக அமைந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் ரன்களைக் குவித்தார்.
- கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானது முதல் முகமது வாசிம் ஐக்கிய அரபு அமீரக அணியின் பேட்டிங்கில் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறார்.
- ஒருநாள் போட்டிகளில் 1,289 ரன்களுடன் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக அதிக ரன்கள் குவித்த 3-வது வீரராக அவர் உள்ளார். டி20 போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்காக அதிக ரன்கள் குவித்தவர்களில் 1,977 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.