8th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருது
- தொழில்துறையுடன் இணைந்து மத்திய அரசால் நிறுவப்பட்ட கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சில் (CIDC), இந்திய கட்டுமானத் துறையின் பல்வேறு கூறுகளை தீவிரமாக ஈடுபடுத்தும் பிரதிநிதி அமைப்பாக செயல்படுகிறது.
- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இன்றியமையாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 15-வது கட்டுமானத் தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் (CIDC) விஸ்வகர்மா விருதுகள் பல்வேறு பிரிவுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த கட்டுமானத் திட்டங்கள், திட்டச் செயலாக்கத்தில் சிறந்த முயற்சியை அங்கீகரிக்கும் வகையில், விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த மெட்ரோ ரயில் சேவை, சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட உள்கட்டமைப்பை வழங்குவது, நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
- பல்வேறு பிரிவுகளில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- முப்படைகளின் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேம்படுத்துவது தொடர்பான புதிய யோசனைகள், முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதை நோக்கமாகக் கொண்ட சிந்தனைப் பகிர்வு (பரிவர்த்தன் சிந்தன்) மாநாடு (08 ஏப்ரல் 2024) புதுதில்லியில் நடைபெற்றது. முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தலைமையில் இந்த ஒரு நாள் மாநாடு நடைபெற்றது.
- முப்படைகளின் பன்முக செயல்பாடுகளுக்கு ஏதுவாக கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. கூட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இந்தச் சூழலில் நடத்தப்படும் இந்த மாநாடு, முப்படைகள் தொடர்பான நிறுவனங்கள், ராணுவ விவகாரங்கள் துறை, ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் தலைமையகம் மற்றும் முப்படைப் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முதல் மாநாடாக இந்த சிந்தனைப் பகிர்வு மாநாடு அமைந்துள்ளது.