6th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தொடர்ந்து 7வது முறையாக குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதன்படி நடப்பு மாதத்துக்கான கூட்டம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
- ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும். தொடர்ந்து 7வது முறையாக இது மாற்றம் செய்யப்படவில்லை.
- பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீவிர கவனம் செலுத்தி வருவதால், ரெப்போ விகிதத்தை மாற்றவில்லை. முக்கிய கடன் விகிதங்களிலும் மாற்றமில்லை.
- பண வீக்கத்தை 4 சதவீதம் என்ற இலக்கிற்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும் நடப்பு நிதியாண்டுக்கான பண வீக்கம் 4.5 சதவீதமாக இருக்கும். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என தெரிவித்துள்ளது.
- ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும். மக்களவைத் தேர்தல் காரணமாக ரெப்போ விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
- கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர்.
- அத்துடன், 200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர்.
- இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் - காஸா இடையே போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33 ஆயிரத்தும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
- இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக நேற்று (ஏப். 5) 4 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதில் 3 தீர்மானங்களை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.
- காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.
- இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தக் கோரியும், போர்க்குற்றங்களுக்கு நீதி கோரியும் வலியுறுத்தப்பட்டது.
- பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படைத் தேவைகளையும், அவசர உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
- கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கும் இத்தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் சிறைப்பிடித்துள்ள பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கும் இத்தீர்மானம் கோரியுள்ளது. இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா, ஜப்பான், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ருமேனியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்கவில்லை.
- சீனா, பிரேசில், இந்தோனேசியா, வங்கதேசம், மாலத்தீவுகள், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 28 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, அர்ஜென்டினா, பல்கேரியா, ஜெர்மனி, மலாவி மற்றும் பராகுவே ஆகிய 6 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
- பாலஸ்தீன மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 42 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சிரியன் கோலன் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பை விடுவிக்கக் கோரிய தீர்மானத்திற்கும் இந்தியா உள்பட 42 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
- கிழக்கு ஜெருசலேம் உள்பட பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை விடுவிக்கக் கோரிய தீர்மானத்திற்கும் இந்தியா ஆதரவாக வாக்களித்தது.