5th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மதரஸா கல்விச் சட்டம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு
- உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்ஸாமில மாணவர்கள் கல்வி பயிலும் மதரஸா கல்விச் சட்டம் 2004, அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தெரிவித்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
- உச்ச நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கை விசாரித்த டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மதரஸா கல்விச் சட்டம் 2024-ஐ ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றன் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
- கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கவுன்சில் நிறுவியுள்ள 15-வது மஹாராஷ்டிராவின் நகர மற்றும் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் விஸ்வகர்மா விருதுகள் இரண்டினை சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம் நிறுவனம் (எஸ்.ஜே.வி.என்) வென்றுள்ளது.
- புதுதில்லியில் உள்ள இந்தியா ஹபிடாட் சென்டரில் நடைபெற்ற விழாவில் எஸ்.ஜே.வி.என் சார்பாக தலைமைப் பொது மேலாளர் (மனிதவளம்) திரு பல்ஜீத் சிங் இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார்