28th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்
- சீனாவின் ஷாங்காயில் உலக வில்வித்தைப்போட்டி நடைபெற்று வருகிறது. உலக வில்வித்தை மகளிா் தனிநபா் பிரிவு அரையிறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தீபிகா குமாரி உள்பட, தென்கொரியாவின் நாம் சுஹ்யோன், கிம் சிஹ்யோன் மற்றும் சீனாவின் லீ ஜியாமன் ஆகொய நால்வர் தகுதிபெற்றனர்.
- இந்த நிலையில், அரையிறுதியில் தென்கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் தீபிகா குமாரி, தென்கொரியாவின் கிம் சிஹ்யோனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
- இதையடுத்து, இரண்டாம் இடம் பிடித்த உலகின் முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
- கடந்த டிசம்பரில் தீபிகா குமாரிக்கு(29) குழந்தை பிறந்த நிலையில், பேறுகால ஓய்வுக்குப் பின், மீண்டும் வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், பிப்ரவரியில் பாக்தாத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 2024-2029 காலகட்டம் வரை புதுப்பிப்பது தொடர்பான இருதரப்பு விவாதங்களுக்காக நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் 4 பேர் கொண்ட குழு, அத்துறையின் செயலாளர் திரு வி. சீனிவாஸ் தலைமையில் வங்கதேசம் செல்கிறது.
- அந்நாட்டின் பொது நிர்வாக அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. பங்களாதேஷ் குடிமைப்பணி ஊழியர்களுக்கான கள நிர்வாகத்தில் திறன் வளர்ப்பு திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பது குறித்தும் இந்த தூதுக்குழு ஆலோசனை நடத்தும்.
- இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) மற்றும் வங்கதேசத்தின் பொது நிர்வாக அமைச்சகம் ஆகியவை 2014ம் ஆண்டு முதல் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை நடத்த ஒத்துழைத்து செயல்படுகின்றன.
- இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ், 71 திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், 2014- ம் ஆண்டு முதல் தற்போது வரை 2600 வங்கதேச குடிமைப்பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நல்லாட்சிக்கான தேசிய மையத்திற்கு வந்து பயிற்சி பெற்றுள்ளனர்.