26th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
விண்வெளியில் அணு ஆயுதங்களுக்கு தடை - ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது ரஷியா
- உலக நாடுகள் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்தக் கூடாது என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்வதற்கான ஒப்பந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டாகக் கொண்டுவந்தன.
- எனினும், கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்துசெய்தது.
- இது குறித்து ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் வாஸிலி நெபன்ஸியா கூறுகையில், 'விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுத்துவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1967-ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானம் அபத்தம் நிறைந்ததாக உள்ளது. அனைத்துவகை ஆயுதங்களையும் விண்வெளியில் நிறுத்துவதைத் தடை செய்வதற்கான அம்சம் அந்தத் தீா்மானத்தில் இடம்பெறவில்லை' என்றாா்.
- எனினும், தீா்மானத்தை ரத்து செய்ததன் மூலம் ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு ரஷியா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
- மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிா்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்தப் பொத்தானை அழுத்தினாலும் குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்களிக்கும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.
- அதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கும் ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை.
- இந்நிலையில், வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய உத்தரவிடக் கோரி ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சந்தேகத்தின் அடிப்படையில் தோ்தலைக் கட்டுப்படுத்தவோ அல்லது தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது. மற்றொரு அரசியல் சாசன அமைப்பைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை என்று தெரிவித்தனர்.
- இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
- மின்னனு வாக்கு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் நம்பகத்தன்மையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
- உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமர்வு தேர்தல் ஆணையத்திற்கு இரு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
- தேர்தல் முடிவுகளை அறிவித்த பின்னரும் குறைந்தது 45 நாள்களுக்கு இயந்திரங்கள் சீல் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவுக்கு பின் வாக்கு இயந்திரத்தை சரிபார்க்க வேட்பாளர்கள் கட்டண செலுத்த வேண்டும் என்றும் இயந்திரத்தில் தவறு இருப்பதை கண்டறிந்தால் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- இயத்திரத்தில் சின்னத்தை பதிவேற்றி முடிந்ததும் சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் அறையிலியே சின்னங்கள் பொருத்தும் இயந்திரங்களை வைக்க வேண்டும். முன்னதாக உள்ள நடைமுறைப்படி 5% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படை இன்று டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு முதன்மை முயற்சியான டிஜிலாக்கர் தளத்துடன் ஒருங்கிணைப்பு டிஜிட்டல் பயணத்தைத் தொடங்கியது.
- விமானப்படை தலைமையகமான வாயு பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) டிஜிலாக்கரின் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய ஆவண களஞ்சிய சேவைகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- இந்த முன்னோடி ஒருங்கிணைப்பு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை வீரர்களின் முக்கியமான சேவை ஆவணங்கள் வழங்கப்படுவது, அணுகப்படுவது மற்றும் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படுவதில் புரட்சியை ஏற்படுத்தும்.
- அதிநவீன தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், தரவு பாதுகாப்பு, செயல்பாட்டு செயல்திறன் மற்றும் தகவல்களுக்கான தடையற்ற அணுகல் ஆகியவற்றிற்கான தனது உறுதிப்பாட்டை இந்திய விமானப்படை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
கஜகஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதை அங்கீகரித்துள்ளது
- கஜகஸ்தானின் அஸ்தானாவில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமனே பங்கேற்றார்.
- கூட்டத்தில் அனைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் விதிமுறைகளில் கையெழுத்திட்டனர். கூட்டத்திற்குப் பிறகு ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
- பண்டைய இந்திய தத்துவமான 'வசுதைவ குடும்பகம்' என்பதில் வேரூன்றிய 'ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்' என்ற யோசனையை எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சர்கள் அங்கீகரித்துள்ளனர்.
- எஸ்சிஓ பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதில் இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை பாதுகாப்புத் துறை செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வளம் மற்றும் வளர்ச்சிக்காக பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்க்கும் சகிப்பற்ற முறையில் அணுக வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
- ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த விரிவான மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால முன்மொழிவு குறித்து திரு கிரிதர் அரமனே நினைவூட்டினார்.
- இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியா முன்மொழிந்த 'பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்)' என்ற கருத்தையும் அவர் எடுத்துரைத்தார்.