19th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஏவுகணையை சோதனை வெற்றி
- ஓடிசா மாநிலத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த ரேடார், எலக்ட்ரோ ஆப்டிகல் ட்ராக்கிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. இவை தவிர்த்து, இந்திய விமானப் படை விமானம் மூலமும் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது.
- துல்லியமான தாக்குதலை நிகழ்த்துவதற்காக அதிநவீன மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்த ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இந்த ஏவுகணை பெங்களூரில் அமைந்துள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஏனைய பாதுகாப்புத் துறை ஆய்வகங்களும் நிறுவனங்களும் ஏவுகணை உருவாக்கத்துக்கு பங்களிப்பு வழங்கியுள்ளன.
- இந்தியா தனக்கான ராணுவ தளவடாங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை 2024 ஏப்ரல் 30 முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள்ளது.
- தற்போதைய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், ஏப்ரல் 30, 2024 அன்று சேவையில் இருந்து ஓய்வு பெறுவதையொட்டி, இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
- 1964-ம் ஆண்டு மே 15-ல் பிறந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 1985 ஜூலை 01 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
- தகவல் தொடர்பு மற்றும் மின்னணு போர் நிபுணரான இவர், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளார்.