12th APRIL 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புதுச்சேரி என்ஐடி “காரை காவலன்” என்ற புதிய செயலியை அறிமுகம்
- காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியின் மாணவர்களான திரு விக்ரம் மற்றும் திரு பிரியதர்ஷன் இவர்களால் உருவாக்கப்பட்ட “காரை காவலன்” என்ற புதிய செயலியின் அறிமுகவிழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கி ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
- இச்செயலியானது வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் குடிமக்கள் இச்செயலியின் வாயிலாக எந்தவொரு தவறான நடத்தையையும் புகைப்படத்துடன் உடனடியாக தங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு பெயர் தெரியாமல் தெரிவிக்கலாம். மேலும், புகாரளிப்பவர் புகாரளிக்கப்பட்ட வழக்கின் நிலையை நிகழ்நேரத்தில் செயலியில் பார்க்கலாம்.
- இங்கிலாந்து தூதராக தற்போதுள்ள அலெக்ஸ் எல்லிஸ் மற்றொரு அரசு பதவிக்கு மாற்றப்பட உள்ளார். இதைதொடர்ந்து லிண்டி கேமரூன் இந்தியாவுக்கான தூதராக இந்த மாதம் பதவி ஏற்பார்.
- இங்கிலாந்து வடக்கு அயர்லாந்து அலுவலகத்தின் தலைமை இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த லிண்டி கேமரூன், தற்போது இங்கிலாந்து தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
- தொழில்துறை உற்பத்திக் குறியீட்டெண் மதிப்பீடுகள் ஒவ்வொரு மாதமும் 12-ம் தேதி (அல்லது 12ஆம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) வெளியிடப்படுகின்றன. மூல முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் இவை தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
- 2024, பிப்ரவரி மாதத்திற்கான, குறியீட்டெண் மதிப்பீடு இன்று வெளியிடப்பட்டது. இதன்படி பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு 5.7% வளர்ச்சியடைந்துள்ளது.
- பிப்ரவரி 2024 மாதத்தில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் விரைவு மதிப்பீடு 147.2 ஆக உள்ளது. 2024 பிப்ரவரி மாதத்திற்கான சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத் துறைகளுக்கான தொழில்துறை உற்பத்திக் குறியீடுகள் முறையே 139.6, 144.5 மற்றும் 187.1 ஆக உள்ளன.
- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் மற்றும் மார்ச் 2024-க்கான கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒருங்கிணைந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டெண்ணை (தற்காலிகமானது) வெளியிட்டுள்ளது.
- அகில இந்தியா மற்றும் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான குறியீட்டெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
- தேர்ந்தெடுக்கப்பட்ட 1114 நகர்ப்புற சந்தைகள் மற்றும் 1181 கிராமங்களில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய விலைத் தரவுகள் என்எஸ்ஓ-வின் களச் செயல்பாட்டுப் பிரிவின் களப்பணி அடிப்படையில் வாராந்திர முறையில் இதற்கான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
- 2024 மார்ச் மாதத்தைப் பொறுத்தவரை பொது குறியீடுகள் அடிப்படையில் அகில இந்திய சில்லறை பணவீக்க 4.85 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 5.66 சதவீதமாக இருந்தது.