Type Here to Get Search Results !

8th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


8th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

முதலாவது தேசிய படைப்பாளி விருதை பிரதமர் வழங்கினார்
  • புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதலாவது தேசியப் படைப்பாளிகள் விருதை வழங்கினார். வெற்றி பெற்றவர்களுடன் சிறிது நேரம் அவர் உரையாடினார். 
  • தேசிய படைப்பாளிகள் விருது என்பது கதை சொல்லல், சமூக மாற்ற ஆதரவு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி மற்றும் கேமிங் உள்ளிட்ட களங்களில் சிறப்பையும், தாக்கத்தையும் அங்கீகரிக்கும் ஒரு முயற்சியாகும். 
  • நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த படைப்பாற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஏவுதளமாக இந்த விருது கருதப்படுகிறது.
மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை வடிவமைக்கும் (AMCA) திட்டத்துக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) ஒப்புதல்
  • இந்திய விமானப்படையின் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப, ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து மேம்படுத்துவதற்கான, நீண்டகால முன்மொழிவான மேம்பட்ட நடுத்தர போர் விமானங்களை வடிவமைக்கும் (AMCA) திட்டத்துக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டத்தின் ஆரம்ப வளர்ச்சி செலவு சுமார் ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • திட்டத்தின் கீழ், போர் விமானத்தின் ஐந்து முன்மாதிரிகள் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ஏடிஏ) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஆகியவற்றால் தனியார் ஆதரவுடன் கூட்டாக உருவாக்கப்படும்.
  • அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் மட்டுமே ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள் உள்ளன. 
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பன்முக, புதிய தலைமுறை ஹெலிகாப்டர்களான 34 துருவ் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடலோரக் காவல்படைக்கு வாங்கவும் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) ஒப்புதல் அளித்துள்ளது.
  • பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டரைத் தயாரிக்கும், அதில் ஒன்பது இந்தியக் கடலோரக் காவல்படைக்கு வழங்கப்படும். இந்திய ராணுவத்திற்கு 25 ஹெலிகாப்டர்கள் வழங்கப்படும். 
  • இரண்டு திட்டங்களும் ரூ.8,000 கோடி மதிப்புடையதாக இருக்கும் என்றும், உள்நாட்டுமயமாக்கலுக்கு ஊக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தடுப்புக்கான மிகச்சிறந்த முயற்சிகளுக்காக 'தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்' விருதை வென்றது இந்தியா
  • தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை எதிர்த்துப் போராடுவதற்கான நாட்டின் அயராத முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், 2024 மார்ச் 6 அன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் மதிப்புமிக்க தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன் விருது இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. 
  • இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தலைவர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
  • அமெரிக்க செஞ்சிலுவை, யுனிசெப், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல ஏஜென்சி திட்டமிடல் குழுவை தட்டம்மை மற்றும் ரூபெல்லா கூட்டாண்மை உள்ளடக்கியதாகும். 
  • இவை அனைத்தும் உலகளாவிய தட்டம்மை இறப்புகளைக் குறைப்பதற்கும், ரூபெல்லா நோயைத் தடுப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
  • 2017-ம் ஆண்டு முதல் இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமனம் 
  • இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தி, ஒரு கல்வியாளர், எழுத்தாளர் மற்றும் பரோபகாரர் என பன்முகங்களை கொண்டவர். 
  • 2006 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் அவருக்கு வழங்கப்பட்டது. 
  • குழந்தை வளர்ப்பு, நிதி திட்டமிடல் மற்றும் சேமிப்பு தொடர்பாக அவர் ஆற்றிய உரைகள் பலருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்துள்ளது.
  • இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவராக இருந்த அவர், பில் கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதார முயற்சிகளிலும் உறுப்பினராக உள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கிளாசிக்கல் லைப்ரரியை சுதா மூர்த்தி நிறுவியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel