Type Here to Get Search Results !

6th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS


6th MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

'நீங்கள் நலமா' திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
  • தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கான நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
  • தமிழக அரசால் தொடக்கப்பட்டிருக்கும் நீங்கள் நலமா எனற் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பிகாரின் மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் ரூ.12,800 கோடியிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்
  • பிகாரின் மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் மார்ச் 6 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை அம்மாநிலத்தில் தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
  • பிகார் மட்டுமல்லாது அண்டை நாடான நேபாள மக்களும் பயன்பெறும் வகையில், முஸாபர்பூர்-மொய்தாரி இடையே 109 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். 
  • பிரதமர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிகார் ஆளுநர் ராஜேந்திர வி ஆர்லேகர், அம்மாநில துணை முதல்வர்கள் சமத் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 4,965 கோடி மதிப்பில் தண்ணீருக்கடியில் முதல் மெட்ரோ சேவை தொடக்கம்
  • மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நாட்டிலேயே முதன் முறையாக நீருக்குள்ளே இயங்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • நீருக்கு அடியிலான மெட்ரோ ரயில் பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
  • ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு ரூ.4,965 கோடி ரூபாய் மதிப்பில், 4.8 கிலோ மீட்டர் நீளத்தில், இந்த மெட்ரோ ரயில் வழித்தட பாதை அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் ஹூக்ளி ஆற்றின் அடியில் 45 வினாடிகளில் பாதையை கடந்து செல்லும்.
  • இந்த நிலையில், இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 
அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்காக பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துடன் நீர்வளத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்
  • உலகளாவிய நிறுவனங்களுக்கு இணையான திறன் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தவும், அணை பாதுகாப்பில் 'மேக் இன் இந்தியா' அதிகாரம் பெறவும், தேசிய நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான மத்திய அரசின் ஒட்டுமொத்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய நீர்வள ஆணையம், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை தூய்மைப்படுத்துதல் துறை, நீர்வள அமைச்சகம், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துடன் அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு, மூன்றாம் கட்டத்தின் கீழ், இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 10 ஆண்டுகள் அல்லது அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டங்களின் காலம் வரை, இதில் எது முன்கூட்டியே நிறைவடைகிறதோ அதுவரை செல்லுபடியாகும்.
  • இந்தியா மற்றும் வெளிநாட்டு அணை உரிமையாளர்களுக்கு விசாரணைகள், வடிவமைப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப ஆதரவு ஆகிய சேவைகளில் சிறப்பு தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக நீர்வள அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாக அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையம் செயல்படும். 
  • இந்த மையம் அணை பாதுகாப்பு குறித்து அமைச்சகத்திற்கு ஆதரவளிக்கவும், அறிவியல் ஆராய்ச்சி மூலம் அணை பாதுகாப்பில் எதிர்கொள்ளும் பல்வேறு வளர்ந்து வரும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்கவும் பணியாற்றும்.
என்.எல்.சி இந்தியா பசுமை எரிசக்தி நிறுவனம், குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
  • என்.எல்.சி இந்தியா நிறுவனம், எதிர்கால புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களைச் செயல்படுத்த என்.எல்.சி இந்தியா பசுமை எரிசக்தி நிறுவனம் என்ற தனக்குச் சொந்தமான துணை நிறுவனத்தை இணைத்துள்ளது. இந்தத் துணை நிறுவனம் குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்தும்.
  • குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட காவ்டா சூரியப் பூங்காவில் 600 மெகாவாட் சூரிய மின் திட்ட டெண்டரை போட்டி ஏல செயல்முறை மூலம் வென்றுள்ளது. 
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை உருவாக்கும் கொள்கைக்கு இணங்க, திட்ட மேம்பாடு இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  • முதல் முயற்சியாக, குஜராத்தின் பூஜ் மாவட்டத்தில் உள்ள காவ்டா சூரியப் பூங்காவில் முன்மொழியப்பட்ட 600 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்காக குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தில், என்எல்சி இந்தியா பசுமை எரிசக்தி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முழு அளவிலான மின்சாரமும் ஜி.யு.வி.என்.எல் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
  • காவ்டா சூரிய பூங்காவில் முன்மொழியப்பட்ட 600 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் இன்றைய தேதியில் என்.எல்.சி.ஐ.எல் உருவாக்கிய மிகப்பெரிய சூரிய மின் திட்டமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel