நாமக்கல் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி
NAMAKAL DISTRICT TNPSC GROUP 4 EXAM FREE COACHING CLASS
‘டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கு இலவச, ‘டெஸ்ட் பேட்ச்’ பயிற்சி வகுப்பில், விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது’ என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு, இலவச, ‘டெஸ்ட் பேட்ச்’ புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டப்படி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேற்று முன்தினம் முதல் நடக்கிறது.
தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்ற மாணவர்கள், 2023ல் வெளியான, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில், 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர்.
டி.என்.யு.எஸ்.ஆர்.பி., – எஸ்.ஐ., தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளனர். டி.என்.யு.எஸ்.ஆர்.பி., போலீஸ் தேர்வில், 17 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், நடப்பாண்டில் வெளியான, எஸ்.ஐ., தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது வந்துள்ள குரூப்-2 முதன்மை தேர்வில், 9 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வாகி உள்ளனர்.இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், தங்களின் விபரத்தை, 04286 -222260 என்ற தொலைபேசி எண்ணிலோ, onlineclassnkl@gmail.com onlineclassnkl@gmail.com என்ற இணையதளத்திலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு, பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.