3rd MARCH 2024 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் முதன்முதலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
- மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால், 'ஓஷன் கிரேஸ்' என்று பெயரிடப்பட்ட இழுவைக் கப்பல் மற்றும் பாராதீப் துறைமுகத்தின் நடமாடும் மருத்துவ மையத்தை (MMU) காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
- கொச்சி கப்பல் கட்டும் தளம், முதன்முதலாக இந்தியாவிலேயே உருவாக்கிய ஏஎஸ்டிடிஎஸ் இழுவைக் கப்பல் ஓஷன் கிரேஸ் ஆகும்.
- நடமாடும் மருத்துவ மையம் (MMU) என்பது பாராதீப் துறைமுகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் சேவையாகும்.
- இந்த இழுவைக் கப்பல் முன்முயற்சி பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
- உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், வளர்ந்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்புகளை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும் உயர் சிறப்பு பாதுகாப்பு கண்டுபிடிப்பு அமைப்பு (iDEX-DIO), புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் டெஃப்கனெக்ட் 2024 என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார்.
- டெஃப்கனெக்ட் 2024 (DefConnect 2024) ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள், பாதுகாப்புத் தொழில்துறை வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனத்தினர், கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவினரை ஒருங்கிணைக்கிறது. இந்த நிகழ்வு ஒத்துழைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பாதுகாப்புத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதற்கான ஒரு தளமாக இது அமையும். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் முன்னணி தொழில்களைச் சேர்ந்த ஏராளமான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
- ஐடெக்ஸ் (iDEX) இதுவரை, 10 சுற்று டிஃபென்ஸ் இந்தியா ஸ்டார்ட்-அப் சேலஞ்ச் (டிஸ்க்) மற்றும் 11 சுற்று ஓபன் சேலஞ்ச் (ஓசி) ஆகியவற்றை நடத்தியுள்ளது.
- பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 336 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.
- இந்த நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ்சபை என அழைக்கப்படும் தேசிய சட்டமன்றம் கூடியது.
- அதில், பெரும்பான்மை வாக்குகளை பெற்று பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் (72) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மொத்தம் 336 உறுப்பினர்கள் கொண்ட அவையில், பெரும்பான்மைக்கு 169 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 201 வாக்குகளை பெற்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகியவற்றின் ஒருமித்த வேட்பாளரான ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றுள்ளார்.